சீன ஷான்சி மாநிலத்தின் Pingyao நகரிலான தீபத் தொடரோட்டத்தில் கலந்து கொண்ட, ஒரு அமெரிக்க நண்பர் பற்றி அறிமுகப்படுத்துகிறோம். பழைமை வாய்ந்த நகரானPingyao, 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது. இங்கு நடந்த தீபத்தொடரோட்டத்தில் கலந்து கொண்ட 104 தீபம் ஏந்துபவர்களகில், உலக மரபுச் செல்வ நிதியத்தின் தலைவர் Jeff Morgen, அதிக கவனத்தை ஈர்த்தார்.
பழமை வாயந்த பண்டையPingyao நகரப் பாதுகாப்பில் ஆற்றிய பெரும் பங்கினால், அவர், ஷான்சி மாநிலத்தின் தீபம் ஏந்துபவர்களிலான ஒரே வெளிநாட்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஒரு வகை பண்பாட்டுத் தொடரோட்டமும் ஆகும். இது பற்றி அவர் கூறியதாவது,
பழமை வாயந்தPingyao பழைய நகரில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்துவது, என்னைப் பொறுத்தவரை, மிக அற்புதமானது. மரபுச் செல்வப் பாதுகாப்புக்காக, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென நான் விரும்பினேன். நானும், உலக மரபுச் செல்வ நிதியத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், இதனால் பெருமையடைகிறோம்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவைப் பொறுத்தவரை, ஒரு நல்ல வாய்ப்பாகும். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, உலகிற்கு ஒரு மாபெரும் நாட்டை வெளிப்படுத்த முடியும் என்றார் அவர்.
அமெரிக்காவிலிருந்து வந்த தீபம் ஏந்துபவர் Jeff Morgen பற்றி கேட்டீர்கள். கடைசியாக, சீனாவின் ஒரு புகழ் பெற்ற போர் செய்தியாளர் பற்றி கூறுகிறோம். அவரின் பெயர் tang shizeng. அவர், வளைகுடா போரை நேரடியாக பார்த்தவர். சுற்றுலா பயணம் செய்ய, அவர் உலகின் பல இடங்களுக்கு சென்றார். போர்களிலான நினைவுகள், அவரது மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளன. ஒரு போர் செய்தியாளராக, ஒலிம்பிக் எழுச்சி பற்றி குறிப்பிடுகையில், அவர் சிறப்பான கருத்துக்களை தெரிவித்தார்.
1 2
|