
நான் பல போர்களையும் பேரழிவுகளையும் அனுபவித்தேன். அதனால் அமைதி பற்றி, நான் பலவற்றை நினைத்தேன். ஒலிம்பிக் எழுச்சி, 3 கருத்துக்களை உள்ளடக்குகிறது. ஒன்று, நாடுகளுக்கிடையில், போருக்குப் பதிலாக, அமைதி வேண்டும். இரண்டாவதாக, தேசிய இனங்களுக்கிடையில், முரண்பாட்டுக்குப் பதிலாக, பரிமாற்றம் வேண்டும். மூன்றாவதாக, மக்களுக்கிடையில், சமமான போட்டி வேண்டும். இவை, ஒலிம்பிக் எழுச்சியின் அடிப்படை அம்சங்களாகும் என்று கருதுகிறேன்.

மே திங்கள் 12ம் நாள், சீன வென்ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்த அடுத்த நாள், Tang Shizeng, கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்குச் சென்றார். அங்கே சென்ற தனது அனுபவங்களை நினைத்த போது, அவர் உணர்ச்சி வசப்பட்டார். அவர் கூறியதாவது,
நான் வென்ச்சுவானில் இருந்த போது, ஒரு மீட்புதவிப் படையின் தலைவரைப் பேட்டி கண்டேன். மாநில நிலை தலைவரான அவரும், அவரது படையினரும், 8 மணி நேரம் நடந்து, மலைகளை தாண்டி, கடுமையான நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட Yingxiu வட்டத்தை சென்றடைந்தனர். அவர் ஒரு உண்மையான தீபம் ஏந்துபவர் தான். பத்தாயிரம் படையினருக்கு தலைமை தாங்கி முன்பகுதியில் நடந்து செல்கின்றனர். நான் தீபத் தொடரோட்டத்தில் ஓடிய 200 மீட்டரை விட, அவர் நடந்த 20 கிலோமீட்டர், மேலும் அதிக மகத்துவம் வாய்ந்தது.

அவர் மேலும் கூறியதாவது,
ஒருவர் தன்னால் இயன்றது அனைத்தையும் பயன்படுத்தி செயல்பட்டால்தான், அவர் ஒரு தீபம் ஏந்துபவராக கூறப்பட முடியும். 1 2
|