• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 09:49:58    
சீன வேளாண்மை

cri

சீனாவில் புதிய கற்காலத்திலான வேளாண் இடங்கள் பற்றிய பல ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள் சீனா முழுவதும் பல இடங்களில் ஆயிரக்கணக்கில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக ஹுவாங்ஹெ எனப்படும் மஞ்சளாறு மற்றும் யாங்சு ஆற்றின் நெடுகே இத்தகைய வேளாண் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே சீனாவில் விவசாயம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை காணமுடியும் என்கிறார்கள். முற்கால அல்லது பழங்கால வேளாண்முறை 7 ஆயிரம் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே மிக முன்னேறியதாக இருந்ததாம்.

உலக அளவில் வேளாண்மை முக்கிய மூன்று இடங்களில் முதன்முதலில் தோன்றியதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, கிழக்காசியா ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தான் ஆதி வேளாண்மையின் மையங்களாக கருதப்படுகின்றன. இதில் கிழக்காசியா என்பது சீனாவையே குறிக்கிறது. தனது தனிச்சிறப்பியல்புகளால், சீன வேளாண்மை தனக்கென ஒரு தனி பாணியை, தனி வேளாண் முறைமையை நிறுவியது, உருவாக்கியது. உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா பல நூற்றாண்டுகளாக கொண்டிருந்த மேம்பாடுகளில் ஒன்றாக, தனது பெரும் மக்கள் தொகைக்கான உணவு மற்றும் வாழ்வாதாரத்தை வேளாண் தொழில்நுட்பத்துறையின் துணையோடு உறுதிபடுத்தியதை குறிப்பிடலாம். சீனாவின் 10 விழுக்காட்டு நிலங்கள் மட்டுமே வேளாண் உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்துள்ளது என்பதால் வேளாண்மையின் ஆற்றலும், திறனும் உயர்வாக இருக்கவேண்டியுள்ளது.

1 2