சீன வேளாண்துறையின் வளர்ச்சியை
 
வளர்ச்சியடையாத நிலை, தொடக்க நிலை தொடங்கி முன்னேறிய முனைப்பான நிலை வரையான 6 கட்டங்களாக பிரிக்கலாம்.
4000 முதல் 10000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலம் சீன வேளாண்துறை வளர்ச்சியடையாத நிலை அல்லது கட்டம் எனலாம். நியோலித்திக் ஏஜ் எனப்படும் புதிய கற்காலமாக கூறப்படும் இக்காலத்தில், சீன வேளாண் துறை பறித்தல் மற்றும் பிரித்தல், வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தலின் அடிப்படையில் வளர்ந்தது. வேளாண்மையின் தோற்றம் அல்லது வெளிப்பாடு, மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது.
கிமு 2100 முதல் கிபி 771 ஆம் ஆண்டு வரையான ஷியா, ஷாங் மற்றும் ஷோ வம்சக்காலங்கள் அடங்கியது வேளாண்மையின் தொடக்க நிலை அல்லது தொடக்கக் காலம். இக்காலத்தில்தான் சீனர்கள் உலோகத்தாதிலிருந்து உலோகத்தை உருக்கியெடுத்து தனியே பிரிக்கும் உலோகங்களை உருக்கியெடுக்கும் நுட்பத்தை கண்டுபிடித்தனர். இதன் பின் வெண்கலத்தால் ஆன விவசாயக் கருவிகள் பயன்பாட்டில் வந்தன. நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் கட்டியமைக்கப்பட்டன. மொத்தத்தில் வேளாண்மை சீனாவில் முளைவிடத்தொடங்கி வளர்ந்தது. 1 2
|