• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 18:01:18    
சீனாவில் புகழ்பெற்ற தாவரவியலாளர் wu zheng yi

cri

சகப் பணியாளர்கள் wu zheng yiஐ தாவர கணிணி என்று அழைக்கின்றனர். சுமார் அரை நூற்றாண்டு காலம் பயன்படுத்தி, அவர் தாவரங்கள் பற்றிய ஒரு மாபெரும் தரவுக்களஞ்சியத்தை இயற்றினார். 2007ம் ஆண்டுக்கான சீனாவின் மிக உயர் அறிவியல் தொழில் நுட்ப விருதை அவர் பெற்றார்.

இவ்வாண்டு 92 வயதாகும் WU ZHENG YI ,தனது வாழ்நாள் முழுவதும் தாவிரவியல் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார். அவரது முயற்சியால், சீனாவின் தாவிரவியல் ஆய்வு உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 45 ஆண்டு கால ஆய்வின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட சீனத் தாவரங்களின் தொகுப்பு என்ற நூல் அவரது வெற்றியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. திரு WU YI ZHENG இதை விரிவாகக் கூறியதாவது

சீனத் தாவரங்களின் தொகுப்பு , சீனாவிலுள்ள அனைத்து தாவரங்களையும் தொகுத்து, அவற்றைக் குடும்பம் குடும்பமாக

வரிசைப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, வளர்ப்பு நெல்லுக்கும், காட்டு நெல்லுக்கும் இடையிலான வித்தியாசம், தொடர்பு, ஒவ்வொரு வகை தாவரம், சீனாவில் அல்லது உலகில் எந்த எந்த இடங்களில் வளர்கின்றன. வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இதன் பயன்பாடு முதலியவை சீனத் தாவர தொகுப்பில் இடம்பெறுகின்றன. இது உலகில் மிகப் பெரிய தாவரங்களின் தொகுப்பாகும். ஐரோப்பிய தாவர தொகுப்பு, வட அமெரிக்க தாவர தொகுப்பு, மலேசிய தாவர தொகுப்பு ஆகியவற்றில் இருப்பதை விட, இதன் உள்ளடக்கம் மிக அதிகமானது என்றார் அவர்.

1959ம் ஆண்டு, சீன தாவர தொகுப்பு இயற்றப்படத் துவங்கியது. 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டப் போது, இதில் 126 தொகுதிகளும், 5 கோடி எழுத்துக்களும் இருந்தன. இதில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான சீனத் தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள அனைத்து தாவர வகைகளின் தொகுப்பான இது, எதிர்காலத்தில், சீனாவில் உயிரின வாழ்க்கையின் பல்வகை தன்மை, உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு பணியில் தாவரங்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கான மிக அடிப்படையான மிகவும் முக்கியமான ஆதரமாக மாறியுள்ளது.

பல பத்து ஆண்டு கால அறிவியல் ஆய்வு மேற்கொண்டு வரும் திரு WU ZHENG YI, அதிக தாவிரவியல் அறிவுகளை கொண்டவராவார். சக பணியாளர்களால் அவர் தாவரக் கணிணி என்று அழைக்கப்படுகின்றார். தாவரங்கள் மீதான விருப்பம் பற்றி குறிப்பிடுகையில், இது அவரது இயல்பான தன்மையாகும் என்று திரு WU ZHENG YI கூறினார். அவர் 1916ம் ஆண்டு ஒரு கல்வி குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்தில் வீட்டு வாயிலின் முன்னால் அமைந்த பூங்காவில் விளையாட அவர் மிகவும் விரும்பினார். அவர் கூறியதாவது

சிறுவயதிலேயே, நான் தாவரங்களை விரும்பினேன். வீட்டு வாயின் முன்னால் அமைந்த பெரிய பூங்காவில் அடிக்கடி தனியாக விளையாடினேன். மூங்கில் தோட்டம் பூங்காவில் உள்ளது. வசந்த காலத்தில் அவை மிக விரைவாக வளர்ந்ததை கண்டு மிகவும் வியப்படைந்தேன் என்றார் அவர்.

தாவரங்களின் மீதான ஆர்வத்தினால், WU YI ZHENG படிப்படியாக தாவர வகைகளை அறிந்து இவற்றின் மாதிரியை சேகரிக்கத் துவங்கினார். தேர்வு மூலம், சின் குவா பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவில் அவர் சேர்ந்தார். பட்டம் பெற்ற பின், யுன் நான் மாநிலத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவர் ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்குள்ள பணியும், வாழ்க்கையும் அவருடைய கல்வி வாழ்க்கையில் முக்கிய பகுதியாக மாறியுள்ளன.

யுன் நான் மாநிலம், சீனாவில் மிக அதிக தாவர வகைகள் கொண்ட மாநிலமாகும். அங்குள்ள தாவர வகைகளின் எண்ணிக்கை முழு நாட்டிலும் உள்ளவற்றில் 50 விழுக்காட்டுக்கு மேலாகும். சேகரித்த தாவர மாதிரியின் நிழற்படங்கள், தாவிரவியல் படைப்புகள் ஆகியவற்றின் படி, அவர் 10 ஆண்டு காலமாக, சுமார் 30 ஆயிரம் தாவர பதிவு அட்டைகளை இயற்றினார். இந்த அட்டைகள், சீனத் தாவரங்களின் தொகுப்பை இயற்றுவதற்கான அரிய தகவலாக மாறியுள்ளன. சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த குன் மின் தாவர ஆய்வகத்தின் ஆய்வாளர் wu su gong நீண்டகாலமாக wu zheng yiஉடன் சேர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அவர் கூறியதாவது

1 2