• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 18:01:18    
சீனாவில் புகழ்பெற்ற தாவரவியலாளர் wu zheng yi

cri

அனைத்து நேரத்தையும் பயன்படுத்தி அவர் கல்வியிலும் ஆய்விலும் ஈடுபடுகின்றார். அவர் ஒரு வல்லுனராக மாறுவதற்கு இது மிக முக்கியமான காரணமாகும் என்று கருதுகின்றேன் என்றார் அவர்.

சீனாவில் ஒரு பழமொழி உள்ளது. 10 ஆயிரம் நூல்களைப் படித்து, 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்ய வேண்டும். wu zheng yi இன் பார்வையில், தாவிரவியல் ஆய்வும் இப்படித்தான செய்யப்பட வேண்டும். 1976ம் ஆண்டு 60 வயதான போது அவர் 2 முறையாக சின்காய் திபெத் பீடபூமிக்கு சென்று அறிவியல் ஆய்வு மேற்கொண்டார். 1982ம் ஆண்டு, அவர் qi lian மலைத் தொடரைக் கடந்து, சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பாலைவனை பிரதேசத்திலும் புல்வெளியிலுமுள்ள அங்குள்ள தாவரங்களை பரிசோதனை செய்தார். 1986ம் ஆண்டு, அவர் jiu zhai gou, shen nong jia முதலிய பிரதேசங்களுக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டார். 1997ம் ஆண்டு, தனது 81 வயதில் அவர் தைவான் தீவில் பரிசோதனை பயணம் மேற்கொண்டார். அவர் கூறியதாவது

அதிக சோதனை பயணம் மேற்கொண்டுள்ளேன். நடந்து பார்த்ததும் பதிவு செய்கின்றேன். சில வேளைகளில், கவனமில்லாத நிலையில் விழுந்தேன். ஒரு முறை நான் கீழே விழுந்த போது, தரையில் 2 வகை சிறிய ரக தாவரங்களைக் கண்டுபிடித்தேன். இவை புதிய வகைகள் முன்பு பதிவு செய்யப்படாதவை என்றார் அவர்.

காடுகளில் பரிசோதனை செய்த போதும், அன்றாட வாழ்க்கையிலும், wu zheng yi எந்நேரத்திலும் பதிவு செய்கின்றார். இது அவரது பல்லாண்டு கால வழக்கமாகும். அவரது துணையாளர் கூறியதாவது

50வது ஆண்டுகள் முதல் 90வது ஆண்டுகள் வரை, அவர் 86 குறிப்பு புத்தகங்களில் தகவல் எழுதியுள்ளார். இவை எல்லாவற்றையும் காலத்தின் படி வரிசைக்கிரமமாக வைத்திருக்கின்றோம் என்றார் அவர்.

சர்வதேச அதிகார பதிவேட்டின் படி, 2005ம் ஆண்டு வரை, திரு wu zheng yiயின் பெயரிடப்பட்ட தாவர வகைகளின் எண்ணிக்கை 1758 ஆகும். இது சீன தாவரவியலாளர்களில் முதலிடம் வகிக்கின்றது. சீனாவின் தாவரங்கள் வெளிநாட்டு அறிஞர்களின் பெயரிடப்படும் வரலாற்று இதனால் முறியடிக்கப்பட்டது.

சீனத் தாவரங்களின் தொகுப்பு தவிர, 1998ம் ஆண்டு முதல் இது வரை, திரு wu zheng yi 43 இலட்சத்துக்கும் அதிகமான எழுத்துகளுடைய கல்வி படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில், கிழக்காசிய தாவர மண்டலத்தை ஒரு தனிப்பட்ட தாவர மண்டலமாக அமைப்பது பற்றிய அவரது கருத்து, உலகில் தாவர மண்டங்களின் பரவல் தொகுதிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

1999ம் ஆண்டு, சீன தென்மேற்கு காட்டு உயிரினங்களின் நுண்ணுயிரி மரபணு களஞ்சியத்தை அமைக்க WU ZHENG YI முன்வைத்தார். அழிவின் விளம்பில் உள்ள உயிரினங்களைப் காப்பாற்றும் வகையில் அமைக்கப்பட்ட இந்த களஞ்சியத்தில் இதுவரை 3000க்கும் அதிகமான காட்டு நுண்ணுயிரி மரபணுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றை அடுத்து உலகில் 3வது காட்டு நுண்ணுயிரி மரபணு களஞ்சியமாக இது மாறியுள்ளது. எதிர்காலத்தில், சீனாவின் வேளாண்மை, வனத் தொழில், மருத்துவம் முதலிய தொடர்புடைய தொழில்களுக்கு உரியின தரவுகளை வழங்கும் அதேவேளையில், உயிரினங்களின் பல்வகை தன்மை, மூலவளங்களின் தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இது முக்கிய பங்காற்றும்.


1 2