சீனத் தலைவர்களுக்கு நோபல்பரிசு
cri

 மே 12 நாள் நிலநடுக்கத்திற்கு பின்னர் ஏற்பட்ட சிறு அளவிலான நிலஅதிர்வின் நடுவிலும் நின்றுகொண்டு உயிரை காப்பாற்றும் முயற்சிகளை தொடர்வோம் என்று மீட்புதவிப் பணியாளர்களுக்கு தூண்டுதல் கொடுத்த அரசுத்தலைவர் ஹூசிந்தாவ், சறுக்கி விழுந்த பின்னரும் தனக்கான மருத்துவ உதவியை மறுத்துவிட்டு, தொடக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்ட மக்கள் நடுவில் இருந்து மீட்புதவிப்பணிகளை வழிநடத்திய தலைமையமைச்சர் வென்சியாபாவ் ஆகியோரின் அர்ப்பணமும் ஈடுபாடும் அனைத்துலக மக்களின் மனங்களை நெகிழ செய்துள்ளன. எவ்லாவற்றையும் விட மனித உயிர்களுக்கு முக்கியத்துவமளிக்கும் கோட்பாடு, அவசர செயல்பாடுகள், அருமையான ஒருங்கிணைப்பு ஆகியவை உயர்வாக மதிப்பிடப்பட்டு்ளன. மக்கள் மையம், மானிட முதன்மை என்பதை நனவாக்கி கொண்டிருக்கும் அவர்கள் இருவருக்கும் நோபல்பரிசு வழங்கப்பட வேண்டுமென்று பலர் முன்மொழிந்துள்ளனர். இணையத்தில் உலாவரும் பலரும் இவர்களுக்கு நோபல்பரிசு வழங்கி பெருமைபடுத்தற்கு ஆதரவாக இணைய வலைபின்னல்களில் எழுதியுள்ளனர். 1 2
|
|