• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 11:34:13    
இளைஞர்கள் பேசும் புதுவகை சொற்கள்

cri
இளைஞர்கள் பேசும் புதுவகை சொற்கள்

நல் நாளைக்கு புல் பூங்காவில் சல் சந்திப்போம் அல்லது நட்ளைக்கு பூட்ங்காவில் சட்ந்திப்போம். வேறு ஒன்றுமில்லீங்க நாளைக்கு பூங்காவில் சந்திப்போம் என்பதை ல அல்லது ட் போட்டு எளிதாக புரியாத வகையில் சிலர் பேசுவதை கேட்டிருக்கலாம். பல்வேறு இரகசிய வழிமுறைகளில் பலர் குறிப்பாக இளைஞர்கள் பேசிகொள்வதை கேட்டிருப்போம். அதேபோன்று இணையத்தில் உலா வருகிறவர்களுக்கிடையில் மட்டுமே பயன்படுத்தப்படும் சில சொற்கள், சீன பதின்மவயதிரால் அதிகமாக பேசப்படுகின்றவையாக உள்ளன. சி சி சி , ஒரக்சு, ஆர் ஆர் என்றால் ஏதாவது புரிகிறதா? ஆனால் இவை குறிப்பிட்ட பொருள் கொண்ட சங்கேத சொற்களாகும். சீனாவில் 15 முதல் 20 வயதான இளைஞர்களில் 80 விழுக்காட்டினர் இவ்வகை சொற்களை பயன்படுத்துவதாக இணையதள ஆய்வொன்று தெரிவித்துள்ளது. தென் சீனாவின் Guangzhou நகரில் இடைநிலைப் பள்ளியில் 50 பேர் கொண்ட வகுப்பில் 70 விழுக்காட்டினர் இவ்வகை சொற்களை தான் பயன்படுத்துகின்றனராம். ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் புரிந்துகொள்ள முடியாத இச்சொற்களை, தனிப்பட்ட இரகசியங்களையும் தகவல்களையும் நண்பர்களோடு பரிமாற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


1 2