பறக்கும் மீன்

பறவைகள், விமானங்கள் ஏன் தூசிகள் கூட பறப்பதை பார்த்திருப்போம். நடிகர்கள் எதிரிகளை பறந்து பறந்து துவம்சம் செய்வதை திரைப்படத்தில் கண்டுகளித்திருப்போம். ஆனால் மீன் பறப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஜப்பானின் NHK தொலைக்காட்சி நிறுவனத்தின் குழு ஒன்று, ஒருவகை மீன் பறப்பதை 45 வினாடிகள் பதிவு செய்துள்ளது. அதுவே உலகிலேயே அதிகமான நேரம் பதிவு செய்யப்பட்ட பறக்கும் மீனின் ஒளிப்படமாக எண்ணப்படுகிறது. தென் மேற்கு ஜப்பான் ககோஷிமா மாகாணத்தில் உள்ள Kuchino-erabu தீவில் பறந்து சென்ற கடல்மீனை NHK தொலைக்காட்சி நிறுவனம் 45 வினாடிகள் ஒளிப்பதிவு செய்துள்ளனது. அந்த கடல்மீன் பறந்துகொண்டே இருக்க, அவ்வப்போது வாலால் நீரின் மேல் அடித்து மேலெழும்பி, ஏறக்குறைய 20 மைல் அதாவது 30 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சென்றுள்ளது. இதற்கு முன்னால் 1928 ஆண்டு புளோரிடாவில் மாலுமி ஒருவரால் கப்பலிருந்து 42 வினாடிகள் எடுக்கப்பட்ட ஒளிப்படமே பறக்கும் மீனின் அதிக நேரம் பதிவுசெய்யப்பட்ட ஒளிப்படமாக இருந்தது. பல நிபுணர்கள் 28 வினாடிகள் நீடித்த பறக்கும் மீனின் பறத்தல் நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பெருங்கடலில் உள்ள 50 க்கு மேற்பட்ட கடல்மீன் வகைகள் பறக்கக்கூடியவையாக அறியப்பட்டுள்ளது. 1 2
|