மதிப்புக்குரிய சீன வானொலியின் துணை இயக்குனர் திரு அவர்களே
தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மதிப்புக்குரிய அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைமைச் செயலாளர் திரு பல்லவி கே பரமசிவன் அவர்களே, ஈரோடு நேயர் மன்றத் தலைவர் திரு பி. ஏ. நாச்சி முத்து அவர்களே
மதிப்புக்குரிய பெரியோர்களே நண்பர்களே
உங்கள் அனைவருக்கும் எனது முற்பகல் வணக்கங்கள்.
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை
முன்னிட்டு இன்று இந்திய கிச்சனில் நடைபெறுகின்ற
கொண்டாட்டக் கூட்டமாகிய இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் தமிழ்ப் பிரிவுப் பணியாளர்கள் அனைவரின் சார்பில் உளமார்ந்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன்.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தில் தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை கொண்டாடுவது எங்கள் பெருமை. கடந்த 45 ஆண்டுகால தமிழ் ஒலிபரப்பு இலட்சியம் போதியளவில் வளர்ந்துள்ளது. 8 தலைமுறையினரின் கூட்டு முயற்சிகளால் இந்த இலட்சிய நோக்கு அரை மணி நேர சீன வானொலி தமிழ் ஒலிபரப்புக் கட்டுமானத்திலிருந்து வளர்ந்து இன்று ஒரு மணி நேர தமிழ் ஒலிபரப்பாகவும் செழுமையான, வாசித்து பயன்பெற வேண்டிய தமிழ் இணையத் தளமும் இணைந்த செய்தி ஊடகமாகியுள்ளது. உலக தமிழர்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்து அழிக்கப்பட முடியாத சக்தியாக சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு வளர்ந்து நிலைத்துள்ளது. இதிலே தமிழ்ப் பிரிவின் அனைத்து பணியாளர்களின் அயாரா உழைப்பும் முயற்சியும் இந்த வளர்ச்சியில் நிறைந்துள்ளது. இப்போது இளைஞர்களும் தமிழ் ஒலிபரப்பு இலட்சியத்தின் புத்தொளியாக புது சக்திகளாக பணிபுரிகின்றார்கள். அவர்களின் பங்கினையும் பெற்று தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகள் மேலும் கேட்கத்தக்கவையாகவும் வாசிக்க தக்கவையாகவும் நிகழ்ச்சிகளின் பல்வேறு அம்சங்கள் மென்மேலும் செழுமையானவையாகவும் வளர்ந்துள்ளன. இவ்வாறு தலைமுறை தலைமுறையான உந்து சக்திகளுடன் செஞ்சீன மண்ணிலிருந்து செவிக்கினிய செந்தமிழோசை உலகெங்கும் என்றுமே பரவியிருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை என்று பெருமையுடன் குறிப்பிட விழைகின்றேன்.
கடந்த 45 ஆண்டுகால முயற்சிகளை மீளாய்வு செய்யும் போது நேயர்கள் எங்களுக்கு வழங்கிய மாபெரும் உதவியையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களின் தூண்டுதலில் தான் தமிழ் ஒலிபரப்பு பன்முகங்களிலும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்களின் விமர்சனத்துடன் தமிழ் ஒலிபரப்பு சுத்தமான தமிழ் மொழியை பயன்படுத்துவதில் ஊன்றி நின்றுள்ளது. நேயர்களின் ஆதரவுடன் சீன வானொலி நிலையம் நடத்திய அனைத்து பொது அறிவுப் போட்டிகளிலும் தமிழ்ப் பிரிவுக்கு நல்ல மதிப்பெண் வழங்கப்பட்டது. நேயர்களின் முழுமையான ஆதரவால் தான் சிறப்பு பரிசு பெற்ற நேயர் என்ற முறையில். 8 நேயர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் பெருமை தமிழ்ப் பிரிவுக்கு வழங்கப்பட்டது. நடந்த பொது அறிவுப் போட்டிகளில் நேயர்கள் தமிழ்ப் பிரிவுக்கும் சீன வானொலி நிலையத்திற்கும் மாபெரும் பங்காற்றி இலட்சக்கணக்கான விடைத்தாள்களை அனுப்பியுள்ளனர். இம்முயற்சி சீன வானொலி நேயர் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆகவே 2007ம் ஆண்டில் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத் தலைவர் திரு எஸ். செல்வம் அவர்கள் சீன வானொலியின் அனைத்து பிரிவுகளிலும் தலைசிறந்த நேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது நேயர்களுக்கு மட்டுமல்ல தமிழ்ப் பிரிவுக்கும் பெரிதும் ஊக்கமளித்துள்ளது. நேயர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இலட்சியம் தொடர்ந்து சீன வானொலி நிலையத்தின் முக்கிய பகுதியாக வளர்வது திண்ணம்.
1 2
|