• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 16:45:45    
45ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலையரசி அவர்களின் உரை

cri

சீன தமிழ் ஒலிபரப்பு வலிமையாகியதுடன் அதன் செல்வாக்கை வியந்து பாராட்டும் வகையில் இந்திய மற்றும் தமிழ் நாட்டின் செய்தி ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன.

இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளேடான இந்துஸ்தான் டைம்ஸ், ஜூன் 8 ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இதன் தமிழாக்கம், தமிழ் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள சாதாரண மக்களால் அதிகமாக வாசிக்கப்படுகின்ற தமிழ் நாளேடான தினதந்தியில் செய்தியாக ஜூன் 15 ஆம் நாள் வெளியானது.

இதுபோல சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை வானளாவ பாராட்டி இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான தி ஹிந்து ஜூன் 19 ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இதன் தமிழாக்கம் ஜூன் 24ம் நாள் வெளியான ஜனசக்தி தமிழ் நாளிதழில் செய்தியாக வெளியாகியது. தி ஹிந்து நாளேட்டின் செய்தியை வாசித்துவிட்டு தெய்வமுரசு என்ற தமிழ் திங்கள் இதழ் ஜூலை பாதிப்பில் ஆசிரியர் பகுதியில் சீன வானொலியை விரிவாக அறிமுகம் செய்து எழுதியுள்ளது.

இவ்வாறு இந்தியாவின் மற்றும் தமிழ் நாட்டின் முன்னணி ஊடகங்கள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை பாராட்டி செய்திகள் வெளியிட்டு, கட்டுரைகள் எழுதுவது, நமது வானொலி சென்றடையும் இலக்கு மக்களான தமிழ் மக்கள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்டு மகிழ்கின்றவர்களின் எண்ணிக்கையை நிச்சயம் அதிகரிக்கும்.

சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, சீன வானொலி தமிழ்ப் பிரிவிலிருந்து தமிழக தொலைக்காட்சி செய்திகள் பெற்றுக்கொண்டது. சீனா பற்றிய அதிகாரப்பூர்வமான செய்திகளை பெற சீன வானொலியை தான் அணுக வேண்டும் என்று நிலைபெற்றுள்ள எண்ணத்தை இது தெளிவாக காட்டுகின்றது.

தமிழ் ஒலிபரப்பின் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கும் போது நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புனித மகத்தான தமிழ் ஒலிபரப்பு இலட்சியத்தை எங்கள் இளைய தலைமுறையினரின் ஒத்துழைப்பதோடு இன்னும் முன்னேற்றப் பாதையில் வளரச் செய்யும் கடப்பாட்டை துணிவுடன் ஏற்றுக் கொள்கின்றோம். அனைவரும் ஒன்றுபட்டு உலக தமிழ் மக்களுக்கு அவர்களது தாய்மொழியாம் செம்மொழி தமிழில் உளமார்ந்த முறையில் சேவை புரிவோமாக. மிக்க நன்றி.


1 2