• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 17:21:19    
ஒலிம்பிக் ஆயத்த பணியின் மீளாய்வு

cri
நிகழ்ச்சியின் துவக்கமாக சீன தேசிய விளையாட்டு அரங்கு பற்றிய தகவல். அதன் பறவைக் கூடு என்றும் இன்னொரு பெயரில் அது அழைக்கப்படுகின்றது. 15 திங்கள் காலத்தில் கட்டியமைக்கப்பட்டு ஜுன் திங்கள் 28ம் நாள் கட்டுமானம் நிறைவேறியது. இதன் மூலம் போட்டிகள் நடைபெறும் 37 அரங்குகள் முழுவதும் போட்டிக்காக தயாராகியுள்ளன.


பறவைக் கூடு பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவில் அமைந்துள்ளது. அதன் கட்டிட பரப்பு 2 லட்சத்து 58 ஆயிரம் சதுர மீட்டராகும். ஒரே நேரத்தில் 91 ஆயிரம் பார்வையாளர்கள் ஒலிம்பிக் துவக்க விழாவை கண்டு ரசிக்கலாம். ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் துவங்கும் போது அதன் துவக்க மற்றும் நிறைவு விழாக்கள், தடகளப் போட்டி, கால்பந்தாட்ட போட்டி ஆகியவை இதில் நடைபெறும்.

பறவைக் கூடு குதிரைச் சேண வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு இரும்புருக்கினால் கட்டியமைக்கப்பட்டது. அது பற்றி இந்த திட்டப் பணிக்கு பொறுப்பான தலைமை ஆணையாளர் தைன் சியோ சன் கூறியதாவது.

இரும்புருக்கு மூலப் பொருட்களால் உருவான பறவைக் கூட்டின்

உலோக வட்டத்தின் நீளம் 320 கிலோமீட்டராகும். இது பெய்ஜிங்கிலிருந்து தியென்சின் மாநகர் சென்று அங்கிருந்து பெய்ஜிங்குக்கு திரும்பும் தொலைவாக இருக்கும். வரையறைக்கு ஏற்ற விகிதம் 100 விழுக்காடாகும். இது சீனாவின் கட்டிட வரலாற்றில் ஒரு அற்புதமாக பொறிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


அடுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை சீனாவின் சிங்காய் சான்சி கான்சு மாநிலங்களிலும் நின்சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்திலும் நடைபெற்ற போது உள்ளூர் மக்கள் வெளிக்காட்டிய உற்சாகம் முன்கண்டிராததாக காணப்பட்டது. நின்சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்தில் முதலில் தீபம் ஏந்தியவர் சீனாவில் மிகப் புகழ் பெற்ற எழுக்தாளரான ச்சான் சியே லியான் ஆவார். தீபத்தை ஏந்தி சில பத்து மீட்டர் தொடரோட்டத்தில் ஓடிய 72 வயதான அவர் இந்த வாய்ப்பை மிகவும் அரிதாக மதிப்பிட்டார். மே திங்கள் சீனாவில் நிகழ்ந்த வென்ச்சுவான் நிலநடுக்கம் பற்றி குறிப்பிட்ட போது அவர் கூறியதாவது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வரவேற்கும் தருணத்தில் நாம் மகிழ்ச்சியாலும் துன்பத்தாலும் ஒரே நேரத்தில் சோதனையிடப்பட்டோம். கடும் துன்பம் அளவான மகிழ்ச்சி போன்ற அனுபவத்தை கொண்ட சீன தேசம் மகத்தான தேசமாகும். வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் அல்லல்படுத்தப்பட்ட சீன மக்கள் அருமையான ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்துவது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்தம் பற்றி ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் பாராட்டு தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்தப் பணி மிகவும் வெற்றிகரமானது. வரலாற்றில் மிக வெற்றிகரமான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக இது பொறிக்கப்படும் என்று அவர் ஜுலை திங்கள் முதல் நாள் தொடக்கம் 3ம் நாள் வரை சீனாவில் பயணம் செய்வதற்கு முன் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் பல்வேறு நாடுகளின் மக்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவது தவிர பரஸ்பரம் புரிந்துணர்வையும் நட்பையும் ஆழமாக்குவர். இணக்கமும் செழுமையும் மேலும் முன்னேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040