• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 17:21:19    
ஒலிம்பிக் ஆயத்த பணியின் மீளாய்வு

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தொடரோட்ட நடவடிக்கையில் பங்கு கொண்ட திபெத் இனப் பாடகி சைதாச்சுமா சீனாவின் இசைத் துறையில் பெரிதும் மதிப்பு பெற்ற சீனாவில் புகழ் பெற்ற பாடகியாவார். தீபதொடரோட்ட நடவடிக்கையில் கலந்து கொண்ட போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் கூறியதாவது.

திபெத்திலான ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் தீபத்தை ஏந்துபவராவேன் என்று கனவு கூட காணவில்லை. நான் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன். நான் அதற்காக பாடுபடுகின்றேன் என்றார் சைதாச்சுமா.


காயமடைந்து தற்காலிகமாக போட்டியிலிருந்து வெளியேறி சிகிச்சை பெற்ற சீன கூடைப்பந்து வீரர் யாங் மிங் ஜுன் 27ம் நாள் நாடு திரும்பி தேசிய அணியின் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் காயமடைந்த பின் சீன ஆண் விளையாட்டு வீரர்களின் பயிற்சியில் பங்கு கொள்வது இதுவே முதல் முறையாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அவருடைய வாழ்க்கையில் மிக முக்கிய வாய்ப்பாகும். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போக்கை அவர் முழுமையாக அனுபவிப்பார். சீனக் கூடை பந்துத் துறை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக நீண்டகாலமாக ஆயத்தம் செய்தது. ஆகவே அவர் அவருக்கான ஆதரவாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற தன்னால் இயன்றதனைத்தையும் செய்து போட்டியில் பங்கு கொள்ளப் போவதாக யாங் மிங் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி திங்கள் அவர் அமெரிக்காவின் என் பி ஏ ஹுஸ்டன் ராக்கெட்ஸ் கூடைப் பந்து அணிக்கு சேவை புரிந்த போது அவருடைய கால் விரல் உடைந்தது. போட்டியிலிருந்து முன்கூட்டியே விலகி சிகிச்சை பெற்றார். தாய்நாட்டிற்காக ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கு கொள்ள அவர் நாடு திரும்பினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான பதக்கங்களை தயாரிக்கும் வணிகக் குழுமமான ஆஸ்திரேலியாவின் பிஹ்பித்தோ குழுமத்தின் சீனப் பகுதிக்குப் பொறுப்பான தலைமை இயக்குனர் தை சியென் தின் பதக்கங்கள் தயாரிப்பு நிலைமை பற்றி விளக்கினார். விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் 6000 பதக்கங்கள் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜுலை திங்கள் 3ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. தங்கப் பதகங்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் 13.04 கிலோகிராம் தங்கம் சிலி நாட்டிலிருந்து பெறப்பட்டது. வெள்ளிப் பதக்கங்கள் தயாரிப்பதற்கு தேவையான 1.34 டன் வெள்ளி ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்டது. வெண்கலப் பதக்கங்களுக்கு தேவையான 0.83 டன் உலோகப் பொருள் சிலியிலிருந்து பெறுப்பட்டது. இதில் கலக்க வேண்டிய உயர் தரமான ஜேட் சீனாவின் குன்ரன் ஜேடால் தயாரிக்கப்பட்டது. அதன் எடை 4 டன்னாகும்.


1 2