• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-01 10:51:59    
மராதன் போட்டியில் முதலிடம் பெற்றவரான Hwang Young cho

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகின் பல்வேறு விளையாட்டு வீரர்களின் மாபெரும் விழாவாகும். விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள்ளே அறைகூவல் விடுத்து, மேலும் உயர்வாகவும், விரைவாகவும், வன்மையாகவும் இருப்பது என்ற இலக்கை நோக்கி, இடைவிடாமல் முன்னேறி வருகின்றனர். இந்த வீரர்களில் தலைசிறந்தவர்கள், அந்த நாட்டு மற்றும் முழு உலக மக்களின் மனதில் பதியும் வெற்றி சின்னங்களாக மாறுகின்றனர். 1992ம் ஆண்டு Barcelona ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் மராதன் போட்டியில் முதலிடம் பெற்றவர், தென் கொரியாவின் Hwang Young cho, ஆவார். அவர், தனது சாதனையைப் பயன்படுத்தி, தென் கொரிய ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றிலான அவமானத்தை நீக்கினார்.

தென் கொரியத் தேசிய விளையாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் மராதன் போட்டிக் குழுவின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான Hwang Young choவின் அவ்வளவு உயரமாக இல்லை. தோற்றத்தில் மிகப் பொதுவாக இருக்கிறார். ஆனால், வெளிப்பாடு மற்றும் பேச்சு நடையால், தன்நம்பிக்கையோடு தோன்றுகிறார். 1992ம் ஆண்டு Barcelona ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மராதன் போட்டியில் முதலிடம் பெற்ற காட்சியை அவர் மீளாய்வு செய்தார்.

மராதன் போட்டி, தென் கொரிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சியாகும். 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தென் கொரியவரான Son Gi Jung, ஆடவர் மராதன் போட்டியில் முதலிடம் பெற்றார். ஆனால், அப்பொழுது, கொரியத் தீபகற்பம், ஜப்பானால் கைப்பற்றப்பட்டிருந்ததால், போட்டியில் கலந்து கொண்ட போதும், பரிசு பெற்ற போதும், அவர் ஜப்பான் நாட்டுக் கொடி பொறிக்கப்பட்ட விளையாட்டு ஆடை மட்டும் அணிய முடிந்தது. அதற்கு 56 ஆண்டுகளுக்குப் பின், 1992ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், நான் ஜப்பானிய வீரரைத் தோற்கடித்து, Son Gi Jungஇன் மன வருத்தம் மற்றும் துன்பத்தை அமைதிப்படுத்தி, தென் கொரிய மக்களுக்கு மேலும் இன்பத்தையும் மனம் உருகுதலையும் உணரச் செய்தேன் என்றார் அவர்.

Hwang Young cho குறிப்பட்ட Son Gi Jung, தென் கொரிய மக்களிடம் பெரும் புகழ்பெற்றவர். தனது மனதில், Son Gi Jung ஒரு மாபெரும் வீரராவார் என்று Hwang Young cho தெரிவித்தார்.

நான் குழைந்தையாக இருந்த போது, பள்ளிப் பாட நூலில் Son Gi Jungஇன் கதையை அறிந்து கொண்டேன். அவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றது, தென் கொரிய விளையாட்டு வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையாகும். அது, வரலாற்று நிகழ்ச்சியுமாகும். நான் பெற்ற தங்கப் பதக்கம், 1948ம் ஆண்டில் தென் கொரியா, நிறுவப்பட்ட பின், ஒலிம்பிக் விளையாட்டுத் தடகள் போட்டிகளில் அடைந்த ஒரே தங்கப் பதக்கமாகும். இப்போது, நான், Son Gi Jungஉடன் இணைந்து, பள்ளி பாட நூல்களில் வீரராக மாறியுள்ளேன் என்றார் Hwang Young cho.

1 2