மராதன் போட்டியில் ஈடுபட்ட காரணம் மற்றும் வெற்றி பெற்ற இரகசியம் பற்றி குறிப்பிட்ட போது, மராதன் திறமைசாலி எனப்படும் அவர் கூறியதாவது,
நான் மேனிலை பள்ளியிலிருந்து மராதன் போட்டியில் ஈடுபடத் துவங்கினேன். அது, மிக முக்கியமான விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். பயிற்சியில் இன்னல் வாய்ந்த நிகழ்ச்சியுமாகும். சுய அறைகூவலாக தான், நான் மராதனைத் தேடினேன். இதில், கடும் பயிற்சி தவிர, வேறு இரகசியம் ஏதும் இல்லை. அதுவே, நான் வெற்றி பெற்ற திறவுகோலாகும் என்றார் அவர்.
அவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற பின், நாட்டின் விளையாட்டு இலட்சியத்துக்கு ஆற்றிய பங்கைப் பாராட்டும் வகையில், அவரது ஊர் Gangwon doவில் Hwang Young cho நினைவு மண்டபம் மற்றும் நினைவுப் பூங்கா கட்டியமைக்கப்பட்டன. அங்கு, தென் கொரியாவின் புகழ்பெற்ற சிற்பியால் செதுக்கப்பட்ட Hwang Young choவின் வெண்கலச் சிலையும் இருக்கிறது.
மராதன், வட கொரியாவிலும் மிக முக்கிய விளையாட்டாகும். தென் மற்றும் வட கொரிய மராதன் அணிகளுக்கிடையிலான பரிமாற்றம் பற்றி, Hwang Young cho கூறியதாவது,
கடந்த ஆண்டு, என் தலைமையிலான, தென் கொரிய மராதன் அணி, வட கொரியாவுக்குச் சென்று, பியொங்யாங் சர்வதேச மராதன் போட்டியில் கலந்து கொண்டது. இதுவே, தென் கொரிய விளையாட்டு வீரர்கள், வட கொரிய மராதன் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டதாகும். பின்னர், தென் மற்றும் வட கொரியக் அணிகளின் வீரர்கள், சீனாவிலுள்ள குவுன் மிங் நகரில் கூட்டாகப் பயிற்சி செய்துள்ளனர். தென் கொரியாவுக்கும் வட பகுதிகளுக்குமிடையில் விளையாட்டுப் பரிமாற்றம் மேற்கொள்வது, மிக முக்கியமாக இருக்கிறது. விளையாட்டுத் துறையில் கருத்து வேறுப்பாடுகள் இல்லை. விளையாட்டுப் பரிமாற்றம், இரு தரப்பின் நல்லிணக்கத்துக்குத் துணை புரியும் என்றார் அவர்.
விரைவில் வரும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீது, அவர் எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார். தென் கொரிய விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நல்ல சாதனைகளை மீண்டும் பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பொழுது, தென் கொரிய சிறப்புத்துறை மராதன் வீரர்களின் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லாத போதிலும், கடும் பயிற்சி அளித்தால் தான், பெய்ஜிங்கில் நல்ல சாதனைகள் ஏன் பதக்கங்களையும் பெற முடியும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, நான் பெய்ஜிங்குக்குச் செல்ல வேண்டும். அப்பொழுது, நான், தென் கொரியத் தொலைக்காட்சி நிலையத்தின் விளக்கம் கொடுக்கும் விருந்தினராக, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வேன் என்று அவர் கூறினார். 1 2
|