B......இப்போது 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நிகழ்ச்சி.
A..... நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் இடம் பெற்ற சிறப்பு நிகழ்ச்சி. இனிமையான இப்பாடல் ஒலிம்பிக் பண்ணாகும். இவ்விசையுடன் 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
B.......204 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 11ஆயிரம் விளையாட்டு வீரர்கள் 5 வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியின் கீழ் அணிதிரண்டுள்ளனர். பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் ஒலிம்பிக் குடும்பத்தின் ஒற்றுமை நிறைவேறியுள்ளது.
இந்த ஒற்றுமை சீன மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்ற ஒற்றுமையாகும். பல்வேறு நாடுகள் கூட்டாக கவனம் செலுத்தும் இத்தருணத்தில் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்கத்தை மகிழ்ச்சியோடு அனைத்து உலகிற்கும் ரிரகடனம் செய்தார்.
A......29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இப்பொழுது துவங்குகின்றது என்றார் அவர்.
B.......5 நட்சத்திரங்கள் கொண்ட செஞ்சீனத் தேசிய கொடி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் ஏற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். 56 தேசிய இனங்களை சேர்ந்த 224 பாடகர்கள் முழுமூச்சுடன் சீன மக்களின் பெருமையையும் மகிழ்ச்சியையும் பாடல் மூலம் பாட்டி காட்டினர்.
A...... சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோக் துவக்க விழாவில் சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆற்றிய பங்கினை வெகுவாக பாராட்டி உளமார்ந்த நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது.
B.......நாட்டின் வாயிலை திறந்து பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களை அழைப்பதற்கு சீனா நீண்டகாலமாக விரும்பியது. இன்றிரவு இந்தக் கனவு நடைமுறையாக மாறியுள்ளது. பெய்ஜிங்கிற்கு வாழ்த்துக்கள். இப்போது பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் விடா முயற்சிகளுக்கும் பல்லாயிரத்துக்கணக்கான தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
A......8ம் நாள் இரவு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவைக் கண்டுகளிப்பது என்பது உலக மக்கள் எதிர்பார்த்த மாபெரும் விடயமாகும். ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு கொண்ட சீனா எந்த வடிவத்தில் துவக்க விழாவை உலகத்திற்கு அர்ப்பணித்தது என்பது பற்றிய கேள்விக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு பொறுப்பான தலைமை இயக்குனர் ச்சான் யீ மோ கூறியதாவது
B.......நாம் யார். நாமனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். எமது துவக்க விழா உலகத்திற்கு பெருமிதம் தரும் வியப்பையும் சீன மக்களுக்கு மன நிறைவையும் வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.
A......பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் முதலாவது இசை நிகழ்ச்சி பழங்கால ஆடை அணிந்திருந்த 2008 இசை கலைஞர்கள் போஃ எனும் சீந இசை கருவியை அடித்து அதிர வைத்த நிகழ்ச்சியாகும்.
B......துவக்க விழாவில் சீனப் பண்பாட்டு அம்சங்கள் நிறைந்து இருந்தது.. 20 மீட்டர் நீளம் 11 மீட்டர் அகலம் 800 கிலோகிராம் எடை கொண்ட ஓவிய வடிவத்தில் நின்றபடியே வரிசையாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைஞர்களின் அரங்கேற்றம் சீனப் பண்பாடு பாணி நிறைந்ததாய் அமைந்தது.
A......சீனாவின் இசை நாடகத்தின் தாய் என்று அழைக்கப்படுகின்ற குன் சியூ நாடகம் துவக்க விழாவில் மக்களுக்கு அரங்கேற்றப்பட்டது.
B.....600 ஆண்டு வரலாறு கொண்ட இந்த நாடகம் சீனாவின் பண்டைகால இசை நாடகத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தது. இது 2001ம் ஆண்டு யூனெஸ்கோவால் மனித குலத்தின் குறுக்கு பேச்சு மற்றும் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
A...... மிக அருமையான ஒலிம்பிக் பூஃ வா என்னும் 5 மங்கள பொம்மைகள் பற்றி சீனாவில் புகழ் பெற்ற நுண்கலை விமர்சகர் ஸவேய் டியன் ச்சுன் மதிப்பிட்டுள்ளார் அவர் கூறியதாவது
B.......நாங்கள் இப்போது காட்டியுள்ள ஒலிம்பிக் பூஃ வா மங்கள பொம்மைகள், நட்பு,, உயிராற்றல், இனிய தோற்றம் ஆகியவற்றை பெற்றுள்ளன. இதன் மூலம் சீனத் தேசத்தின் பண்பாடு புதிய அம்சம் கொள்கிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் புதிய பண்பாட்டு பாணியை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
1 2
|