• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 02:15:34    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி அ

cri

B…………..பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீன நாகரிகத்தை எடுத்துக்காட்டும் அரங்கும், உலகின் பல்வேறு நாடுகளின் பண்பாடுகளின் குதூகல கொண்டாட்ட விழாவும் ஆகும். நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்சிங்கில் ஒலிம்பிக் பற்றிய பொருட்காட்சியை நடத்துவதை சர்வதேச ஒலிம்பிக் குழு முதன்முறையாக முன்வைத்தது.

A…………….இந்த பொருட்காட்சியில் ஸ்விட்சர்லாந்தின் லொசானில் அமைந்துள்ள ஒலிம்பிக் அருங்காட்சியகத்திலான அரிய பொருட்கள் பெய்சிங்கில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்ற தொல் பொருட்கள் இடம்பெறும் பொருட்காட்சியை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியோடு சேர்த்து நடத்துவது என்பது, பல்வேறு பண்பாடுகளுக்கிடையில் பரிமாற்றத்தை ஒன்றிணைக்கும் ஒலிம்பிக் எழுச்சியை வெளிப்படுத்துகிறது என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவைச் சேர்ந்த பண்பாட்டு பணியகத்தின் தலைவர் Zhao Dongming கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

B………சீனத் தனிச்சிறப்புகளை சர்வதேச பழக்கவழக்கத்துடன் இணைக்க நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். சீனாவின் நீண்டகால வரலாற்றையும் பண்பாட்டையும் ஒன்றாக காட்டுவது மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துடன் விரிவான முறையில் ஒத்துழைப்பதன் மூலம், உலகிலுள்ள பல்வேறு பண்பாடுகளுக்கு இடையிலான பரிமாற்றத்தையும் ஒன்றிணைப்பையும் வெளிக்கொணர விரும்புகின்றோம் என்று Zhao Dongming கூறினார்.

A…………தவிர, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டியின் போது சீனாவின் கலை அரங்குகளில், பல வெளிநாட்டுக் கலைக் குழுக்கள் தங்கள் சிறப்பு அம்சங்களை வெளிக்கொணர்ந்து பரவல் செய்ய மிகவும் கவனம் செலுத்துகின்றன. வெளிநாடுகளுக்கான சீனக் கலைநிகழ்ச்சி அரங்கேற்ற நிறுவனம், பெய்சிங்கில் சந்திப்போம் என்ற 2008ம் ஆண்டின் பண்பாட்டு நடவடிக்கைக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்நடவடிக்கையை நடைபெறும் போது, 30க்கு அதிகமான நாடுகளிலிருந்து வந்த கலைஞர்கள் தங்கள் படைப்புக்களை அரங்கேற்றுவர். இந்த நிறுவனத்தின் தலைமை மேலாளர் Zhang Yu கூறியதாவது:

B…………..ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலக விழாவாகும். பல்வகை இடங்களிலிருந்து பல்வேறு தனிச்சிறப்புடைய அம்சங்களைச் சேர்த்து, 5 பெரிய ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம். உலகளவில் தலைசிறந்த பல கலைக் குழுக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கின்றன. இவ்வாறு உலகப் பண்பாட்டின் குதூகல கொண்டாட்ட சூழல் உருவாக்கப்படுகிறது என்றார் அவர்.

A……………..பறவைக் கூடு என்ற தேசிய விளையாட்டு அரங்கின் மேல் பகுதியில், சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பெரியரக திரவக படிவ திரை, உயர் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பொருத்தப்பட்டதாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பற்றிய மாபெரும் எழுச்சி பரவலை ஊட்டியது.

B………. துவக்க விழா நடைபெற்ற அனைத்து போக்கிலும், சீனத் தேசிய விளையாட்டு அரங்கின் வெளியே வண்ண ஒளிகளால் மிதக்கின்ற வகையில் வான வேடிக்கைகளால் ஒளியூட்டப்பட்டது. இது, பழங்காலத்தில் சீனாவைச் சேர்ந்த 4 பெரிய கண்டுபிடிப்புகளான வெடிமருந்து பண்பாட்டை கையேற்று வெளிப்படுத்துகிறது.

A………..பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கொளுத்தப்பட்ட வான வேடிக்கை வெடிகளின் வடிவம் தனிச்சிறப்பு மிக்கவை. அதன் பயன்பாட்டு அளவு பரந்துபட்டது. இது, முந்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை விட மிக தனிச்சிறப்புடைய ஒன்றாகும்.

B…………..ஒலிம்பிக் துவக்க விழாவின் கலைநிகழ்ச்சி துவங்கியவுடன், பெய்சிங் தியென் ஆன் மென் சதுக்கத்திலிருந்து தேசிய விளையாட்டு அரங்கு வரையான பாதையில், கால்தடம் போன்ற வடிவிலான 29 வாண வெடிகள் கொளுத்தப்பட்டன. இது, 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெறுவதன் அடையாளமாக விளங்கிறது.

A……….. நீர் கன சதுரத்திலான நீச்சல் நெறிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர் அறிவியல் தொழில் நுட்பத்தை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர் Alex Gerald,வாயாரப் பாராட்டினார். அவர் கூறியதாவது:

அனைத்தும் மிகவும் சிறப்பானது. இந்நீர் கன சதுரத்தில் விளையாட்டு வீரர்களின் திறமைகள் மேலதிக ஆற்றலோடு வெளிக்கொணரப்பட்டு, உலக சாதனைகளை முறியடிக்க செய்யலாம். இந்த உள் அரங்கத்துக்கான வடிவமைப்பு வெறும் தோற்றத்தை மட்டுமல்ல, விளையாட்டுப் போட்டியின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டுள்ளது என்றார் அவர்.


1 2