• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-14 10:29:01    
புற்றுநோயை கண்டுபிடிக்க தலைமுடி

cri
புற்றுநோயை கண்டுபிடிக்க தலைமுடி

உயிர்கொல்லி நோயாக நம்மை பயமுறுத்தும் கொடிய நோய்களில் புற்றுறோய் ஒன்றாகும். தொடக்க நிலைகளில் கண்டுபிடிக்கப்பட்டால் சிலவகை புற்றுநோய்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றாலும் மரணபயத்தை தருவது உண்மை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு பெரும்பாலும் முடி கொட்டிவிடுவதுண்டு. அப்படியானால் அது தொடர்பான ஆய்வுகளில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக கண்டுபிடிப்பின் வெற்றியை அடைய செய்துள்ளது. பெண்ணின் முடியை எக்ஸ்ரே எனப்படும் ஊடுகதிர் சோதனை செய்துபார்த்தால் நெஞ்சில் உள்ள புற்றுநோயை கண்டுபிடித்துவிடும் வசதி இவ்வாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 பெண்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் 75 விழுக்காடு சோதனை வெற்றியடைந்துள்ளது. தேசிய அளவில் இது அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்பு முடிவுகள் இன்னும் மிக தெளிவானதாகவும் மேமோகிராமை போன்ற உயர் தரசோதனை போல் அமைந்து முழு வெற்றியடைய வேண்டுமென்று ஆய்வுகள் மேலும் தொடருகின்றன. இச்சோதனை நெஞ்சிலான புற்றுநோய், முடியின் மூலக்கூறு அமைப்பை மாற்றுகின்றன என்ற ஆஸ்திரேலிய பல்கலைக்கழக கண்டுபிடிப்பை அடிப்படையாக கொண்டுள்ளது. நெஞ்சு புற்றுநோய் cytokines எனப்படும் புரோதசத்துகளை இரத்தத்தில் கலக்க செய்து முடி வளரும் பகுதியை பாதிக்க செய்யும். அதனை இந்த உயர்நிலை ஊடுகதிர் சோதனை தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கலாம். எல்லா பெண்களும் பயன்படுத்தும் இம்முறை மேமோகிராமை விட மிகவும் வலி குறைந்ததாக இருக்கும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

1 2