24 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க Los Angeles ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வாள் வீச்சு போட்டியில், சீன வீராங்கனை luanjujie, சீன பிரதிநிதிக் குழுவின் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார். 24 ஆண்டுகளுக்கு பின், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 12ம் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கன வாள் வீச்சு போட்டியில், 24 வயதான சீன வீரர் zhongman தங்கப் பதக்கம் வென்று, சீனாவின் வாள் வீச்சு வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கினர்.
24 ஆண்டுகளுக்கு பின், வாள் வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது குறித்து, அவர் முன்பு எதிர்பார்க்கவில்லை. இது குறித்து அவர் கூறியதாவது:
இத்தகைய சாதனையை பெறுவேனென்று, நான் முன்னதாக எதிர்பார்க்கவில்லை. எனது பயிற்சியாளருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரிடம் அதிகமான அறிவையும் தொழில் நுட்பத்தையும் நான் கற்றுக்கொண்டேன் என்றார் அவர்.
சீன வீரர் zhongman தங்கப் பதக்கம் வென்ற பின், சீன வாள் வீச்சு அணியின் தலைமை பயிற்சியாளர் zhangyongchun கூறியதாவது:
நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முதலில், நாங்கள் தங்கப் பதக்கம் வெல்வோம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், போட்டியாற்றல் மற்றும் மனவுறுதியை பொறுத்தவரை, வாள் வீச்சு வீரர்கள் தங்கப் பதக்கம் வெற்க கூடும் என்று நம்பினோம் என்றார் அவர்.
1 2
|