ஆகஸ்ட் திங்கள் 10ம் நாளிரவு, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 56 கிலோ எடைக்கு குறைவான ஆடவர் பளுதூக்குதல் போட்டியில், சீனாவின் வீரர் longqingquan தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 24 ஆண்டுகளில், சீன விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும். தவிர, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் longqingquan முதல் முறையாகக் கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் வென்றார். இவ்வாண்டு, அவருக்கு வயது 18 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
10ம் நாளிரவு, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 56 கிலோ எடைக்கு குறைவான ஆடவர் பளுதூக்குதல் போட்டி, பெய்ஜிங் விமான மற்றும் விண்வெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மொத்தம் 292 கிலோ எடை என்ற சாதனையை படைந்த Longqingquan, உலக சாதனையை முறியடித்தார். இது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன பிரதிநிதிக் குழு பெற்ற 6வது தங்கப் பதக்கமாகும்.
Longqingquan,1990ம் ஆண்டு பிறந்தார். ஒலிம்பிக் விளையாட்டரங்கில் முதல்முறையாக கலந்துகொண்ட போது, உற்சாகத்துடனும், மனவுறுதியுடனும் அவர் கூறியதாவது:
இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட போது, நான் கொஞ்சம் பதட்டமடைந்தேன். போட்டியிட்ட வீரர்கள் மிகவும் வலிமையுடையவர்களாக இருந்த போதிலும், சொந்தத் திறனில் நம்பிக்கைக் கொண்டு கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
சீன ஆடவர் பளுதூக்குதல் அணியைப் பொறுத்தவரை, longqingquan இன் தங்கப் பதக்கம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெறப்பட்ட முதலாவது பதக்கமாகும். 24 ஆண்டுகளுக்கு பின், 56 கிலோ எடைக்கு குறைவான ஆடவர் பளுதூக்குதல் போட்டியின் தங்கப் பதக்கத்தை சீன வீரர்கள் மீண்டும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 2
|