• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-20 13:48:02    
Qing Dao நகரில் ஊனமுற்றோருக்கான உறைவிடத் திட்டம்

cri
சீனாவின் கிராமங்களில் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிடத் திட்டப்பணி துவங்கியதை அடுத்து, Shan Dong மாநிலத்தின் Qing Dao நகரில் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிடத் திட்டப்பணி துவங்கியுள்ளது.

வீடு, அன்பான துறைமுகம் ஆகும். வீட்டில் அன்பு நிறைந்திருக்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். மிகப் பல ஊனமுற்றோரைப் பொறுத்த வரை, தாம் புன்னகையுடன் வாழ்க்கையை எதிர்நோக்கி, மன உறுதியுடன் முன்னேறுவதில் வீடு முக்கிய பாதுகாப்பு அளிக்கிறது.

Shan Dong மாநிலத்தின் Lai Xi நகரில் உள்ள Hou Ti கிராமத்தில் வாழும் Wang Yu Qing என்பவருக்கு வயது 44. அவரும், அவரது அண்ணனும் ஊனமுற்றோர் ஆவர். அவரது குடும்பத்தில் 5 பேர் இருக்கின்றனர். முன்பு சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். நீண்டகாலமாக பழுதுபார்ப்புப் பணி இல்லாததால், வீட்டின் அடித்தளம் சற்று கீழே இறங்கியிருந்தது. சுவரில் பிளவுகள் ஏற்பட்டிருந்தன.

ஆனால், 2006ஆம் ஆண்டு, அரசின் உதவியுடன், அவர் ஒளி நிறைந்த, விசாலமான புதிய வீட்டில் குடிபெயர்ந்து, தமது புதிய வாழ்க்கையை துவங்கினார். புதிய வீட்டில் வாழ்வது, மகிழ்ச்சி தருகின்றது என்று அவர் கூறினார். புதிய வீட்டில் குடிபெயர்ந்த பின், கிராம அரசு அவருக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலத்தில் காளான் வளர்ப்பதன் மூலம், அவர் ஆண்டுக்கு குறைந்தது 8 ஆயிரம் யுவானை பெற முடியும். தற்போது அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளது. காளாண் வளர்ப்பு அளவை விரிவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

2003ஆம் ஆண்டு, கிராமப்புறங்களின் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிடத் திட்டப்பணி Qing Dao நகரில் நடைமுறைக்கு வரத் துவங்கியது. திட்டப்படி, 5 ஆண்டுகாலத்தில், கிராமப்புறங்களில் இடிந்த வீட்டில் தங்கியிருக்கும் 5 ஆயிரம் வறிய ஊனமுற்றோர் குடும்பங்களுக்கு புதிய வீடு கட்டியமைக்கப்படும். இத்திட்டப்பணி நடைமுறைக்கு வந்த 4 ஆண்டுகளில், சுமார் 7 கோடியே 20 லட்சம் யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Qing Dao நகரில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் 4 கோடியே 60 லட்சம் வறிய ஊனமுற்றோர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, சமூகத்தின் பல்வேறு துறையினர், Qing Dao நகரின் ஊனமுற்றோர் நல நிதியத்துக்கு 80 லட்சம் யுவானை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இவ்வாண்டு, இத்திட்டப்பணி நடைமுறைக்கு வந்த 5ஆம் ஆண்டாகும். ஆயிரம் வறிய ஊனமுற்றோர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டியமைக்கப்படும். 5 ஆண்டுகால உறைவிட திட்டப்பணி இனிதே நிறைவேறும். Qing Dao நகரின் ஊனமுற்றோர் சம்மேளனத்தின் தலைமை இயக்குநர் Sun Pei Ying பேசுகையில், 5 ஆண்டுகால திட்டப்பணி நிறைவேறவுள்ளது. இருந்த போதிலும், கிராமப்புறங்களில் வாழும் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிடப் பணியை நிறுத்த முடியாது என்றார். இனிமேல், இது பற்றி நீண்டகால பயன் தரும் அமைப்பு முறை உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"5 ஆண்டுகளுக்குள் ஊனமுற்றோர் அனைவரின் உறைவிட பிரச்சினையையும் முற்றிலும் தீர்க்க முடியாது. வரையறைக்கு ஏற்ற, ஊனமுற்றோர் அட்டை கிடைக்கும், குறைந்த பட்ச வாழ்க்கை உத்தரவாதத் தொகை அளிக்கப்படுவோர் பற்றி ஆய்வு செய்வோம். இனிமேல், ஆண்டுதோறும் உறைவிட இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டிய ஊனமுற்றோருக்கு உரிய திட்டம் வகுக்கப்பட வேண்டும்" என்றார், அவர்.

கிராமப்புறங்களில் வாழும் ஊனமுற்றோருக்கான உறைவிட திட்டப்பணி விறுவிறுப்பாக நடைபெறும் வேளையில், நகரில் வாழும் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிட திட்டப்பணியும் தீவிரமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

சுமார் 60 வயதான வறிய ஊனமுற்றோர் Wang Jing Han, Qing Dao நகரின் Shi Bei பிரதேசத்தில் வாழ்கின்றார். அவரது மனைவியும், மகனும் ஊனமுற்றோர் ஆவர். அண்மையில், Qing Dao நகர ஊனமுற்றோர் சம்மேளனமும், Shi Bei பிரதேசத்தின் ஊனமுற்றோர் சம்மேளனமும் அவரது வீட்டைத் சீரமைக்க உதவி செய்தன. அவரைப் போல், இவ்வாண்டு முதல் தொகுதியாக 200 வறிய ஊனமுற்றோர் குடும்பங்கள் நலன் பெற்றுள்ளன. தற்போது, Wang Jing Hanவின் வீட்டில் மாற்றம் காணப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது:

"முன்னதாக, என் வீடு பாழடைந்திருந்தது. வீட்டில் இருளாக இருந்தது. தற்போது, அரசு எனது வீட்டைச் சீரமைத்தது. அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்" என்றார், அவர்.

1 2