
Qing Dao நகரில் வாழும் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிட திட்டப்பணி, 2007ஆம் ஆண்டு ஜுலை திங்கள் துவங்கியது. நகராட்சி அரசு 20 லட்சம் யுவான் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 218 வறிய ஊனமுற்றோர் குடும்பங்களின் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 270 ஊனமுற்றோர் குடும்பங்கள், மலிவான வாடகை வீட்டில் குடிபெயர்ந்துள்ளன. ஊனமுற்றோர் குடும்பங்கள் மலிவான வாடகைக்கு வீடு வாங்குவதற்கு சுமார் 40 லட்சம் யுவான் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இனி, Qing Dao நகரின் ஊனமுற்றோரின் உறைவிட வசதியை மேம்படுத்த, நகராட்சி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். Qing Dao நகராட்சித் தலைவர் Xia Geng கூறியதாவது:
"பொது மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்துவது என்பது, பல்வேறு நிலை அரசுகள் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும். ஊனமுற்றோர் அனைவரும், மன உறுதியுடன், தமது மதிப்பை நனவாக்கி, இந்த நகரின் உயிராற்றலை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். நகரில் பல்வேறு துறையினர்களின் கூட்டு முயற்சியுடன், ஊனமுற்றோருக்கு ஆதரவும் உதவியும் அளிப்பதென்ற சமூகச்செயல்பாடு, இந்த நகரின் நீண்டகால நடவடிக்கையாக மாற வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார், அவர். 1 2
|