• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-24 23:29:20    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா ஆ

cri
விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவதற்காக, தன்னால் இயன்றதனைத்தையும் செய்யும் அதே வேளையில், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு முன்வைத்த தனிச்சிறப்பு மற்றும் உயர் நிலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொது குறிக்கோள் நனவாக்கப்பட்டது. பசுமையான ஒலிம்பிக், அறிவியில் தொழில் நுட்ப ஒலிம்பிக், மானுட மைய ஒலிம்பிக் என்ற 3 ஒலிம்பிக் கருத்துக்களும் போதியளவில் வெளிப்படுத்தப்பட்டன.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகத் தலைவர் Gilbert Felli பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மதிப்பிடுகையில் கூறியதாவது

போட்டிகள் மிகவும் சுமூகமாக நடைபெற்றன என்று உறுதியுடன் கூறலாம். அழகான விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள், மிகவும் சிறப்பான போட்டிகள் ஆகியவற்றைக் கண்டுகளித்துள்ளோம். மேலும், போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகளும் சிறப்பாக அமைந்தன. பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகளிடையிலான உறவு உரிய முறையில் கையாளப்பட்டது. இதுவரை அனைத்து பணிகளை குறித்து மன நிறைவு அடைந்துள்ளோம் என்றார் அவர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் விளக்கப் படி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 4 தனிச்சிறப்புக்களை கொண்டுள்ளது. அதாவது, சீனப் பாணி, சீன பண்பாடும் நாகரிகமும், சீனாவின் நவீன தோற்றம், பொது மக்களின் பங்கெடுப்பு ஆகியவை ஆகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இவையனைத்தும் நன்றாக வெளிப்படுத்தப்பட்டன.

பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் வாக்குறுதிக்கிணங்க, விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள், போட்டிக்கான ஏற்பாட்டுப் பணி, துவக்க விழா, பண்பாட்டு நடவடிக்கைகள், செய்தி ஊடகங்களுக்கான சேவை, ஊடகங்களின் மதிப்பீடு, பாதுகாப்புப் பணி, தன்னார்வ தொண்டர்கள், சேவை உள்ளிட்ட பல துறைகளில் உயர் தரமாக போட்டியை நடத்த வேண்டும். கடந்த 16 நாட்களில், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் உயர் தரத்தை உணர்ந்துள்ளனர். இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் டேவிஸ் அம்மையார் கூறியதாவது

ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. மிகப்பல தலைவர்களையும் பார்வையாளர்களையும் உபசரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மன நிறைவு அடைந்துள்ளோம் என்றார் அவர்.

தனிச்சிறப்பு, உயர் தரம் ஆகியவை படைத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் குறிக்கோளை நிறைவேற்றுவது, மாசுபாடற்ற ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், மானுட மைய ஒலிம்பிக் ஆகிய 3 கருத்துக்களிலிருந்து பிரிக்கப்பட முடியாதது.

1 2