2001ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பெய்ஜிங் மாநகரம் நடத்தும் என அறிவிக்கப்பட்ட பின், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் பெய்ஜிங் மாநகரம் 14 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய வாக்குறுதிகள் அனைத்தையும் இம்மாநகரம் நிறைவேற்றியுள்ளது. பெய்ஜிங் நகரின் வானமும் நீரும் மேலும் தெளிவாக மாறியுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தும் மக்களின் மனதில் ஆழ பதிந்துள்ளது.
அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக்கை நடத்துவது என்ற கருத்தை போட்டியை நடத்த விண்ணப்பம் செய்த போது, பெய்ஜிங் மாநகரம் முன்வைத்தது. தற்போது, பல அறிவியல் தொழில் நுட்பங்கள் நிறைந்த திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போட்டிக்காக ஆயத்தம் செய்த போக்கில், அறிவியல் தொழில் நுட்பமும், கருத்துக்களும் பரவலாகப் நடைமுறையாயின. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவரும் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சருமான வான் காங் கூறியதாவது
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஒலிம்பிக் வரலாற்றில் தனிச்சிறப்பு மிக்க உயர் தரமான விளையாட்டு விழாவாக நடத்தும் வகையில், தொடர்புடைய வாரியங்கள் 10 முக்கிய அறிவியல் தொழில் நுட்ப கண்டிபிடிப்புகளை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பரவலாகப் பயன்படுத்தியுள்ளன. இந்த அறிவியல் தொழில் நுட்பங்கள் மேலும் அதிகமான பொருளாதார மற்றும் சமூக பயன் தரும் என்றார் அவர்.
7 ஆண்டுகளுக்கு முன், பெய்ஜிங் மாநகரின் நிலைமை பற்றி அளித்த மதிப்பீட்டு அறிக்கையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்பு பயன்படுத்தாத ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தியது. அதாவது, பெய்ஜிங் நடத்தும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனா மற்றும் உலக விளையாட்டுக்களுக்கு தனிச்சிறப்பு மிக்க மரபு செல்வத்தை விட்டு செல்லும் என்பதாகும். சீனா, உலகம் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு அனைத்தும் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளதை 7 ஆண்டுகளுக்கு பின், பெய்ஜிங் மாநகரம் தமது நடைமுறை நடவடிக்கை மூலம் இன்று நிரூபித்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவுக்கு தந்துள்ள செல்வாக்கு பற்றி லண்டன் ஒலிம்பிக் அமைப்புக் குழுத் தலைவர் Colin Moynihan கூறியதாவது
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், உயர் தரமான ஒலிம்பிக் விளையாட்டு வசதிகள் தொடர்ந்து மக்களுக்குச் சேவை புரியும். விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் மீதான சீன மக்களின் ஆர்வம் மேலும் பொங்கும். சீனாவில், விளையாட்டு நடவடிக்கைகள் இன்னும் அதிகமாகிவிடும் என்று நம்புகின்றேன் என்றார் அவர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சந்தை வளர்ச்சி பிரிவின் தலைவர் Heiberg கூறியதாவது
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், மேலும் அதிகமான பயணிகள் சீனாவுக்கு வருகை தருவர். சீனாவின் பொருளாதாரமும் தொழிற்துறையும் இதனால் வளர்ச்சி அடையும். தொலைநோக்கு பார்வையில், பெய்ஜிங் மட்டுமல்ல சீன நாடே நன்மை பெறும் என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம் சீன இளைஞர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய கல்வி அறிவு பெறலாம் என்று 7 ஆண்டுகளுக்கு முன் பெய்ஜிங் மாநகரம் வாக்குறுதி அளித்தது. தற்போது, ஒலிம்பிக் பாடம் சீனாவின் 40 கோடிக்கு அதிகமான இளைஞர்களிடையில், பரவலாகியுள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் புனிதத் தீபத் தொடரோட்டம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் அதிக நாட்களாக, நடைபெற்ற மிகவும் பரந்த அளவில், மிகப் பல மக்கள் கலந்து கொண்ட தீபத் தொடரோட்டமாகும். 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு அதிகமான விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதி குழுக்களின் எண்ணிக்கையும் வரலாற்றிலேயே மிக அதிகமான பதிவாகும். 30 ஆயிரத்துக்கு அதிகமான செய்தியாளர்கள் இப்போட்டியின் போது செய்தி சேவை புரிந்தனர். சுமார் 400 கோடி மக்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு இரசித்தனர். இவை எல்லாம், ஒலிம்பிக் விளையாட்டின் செல்வாக்கைப் பெரிதும் உயர்த்தியுள்ளன.
இன்றிரவு பெய்ஜிங் ஒலிம்பிக் புனித தீபம் அணைக்கப்படும். ஒலிம்பிக் கொடி 2012ஆம் ஆண்டு இப்போட்டியை நடத்தும் பிரிட்டனின் லண்டனுக்கு வழங்கப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நீண்ட வரலாறுடைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை சீனப் பண்பாடோடு இணைக்கும் பெரிய விடயமாகும். மேலை மற்றும் கீழை நாகரிகங்கள் மேற்கொண்ட ஆர்வமுடைய உரையாடலும் இதுவாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பொறுத்தவரை, 16 நாட்கள் என்பது மிக குறுகிய காலமாகும். ஆனால், இந்த குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள நட்புறவு என்றுமே தொடரும். உலகின் எந்த நாடு மற்றும் பிரதேசத்திலிருந்து எங்கு சென்றாலும், நாம் என்றுமே ஒரே குடும்பத்தினர். 1 2
|