• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-25 10:19:00    
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் ஒரு சீன வம்சாவழி வீராங்கனை

cri

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் ஒரு சீன வம்சாவழி வீராங்கனை பற்றி கூறுகிறோம். அவரது பெயர், feng tianwei. அவர் வடக்கிழக்கு சீனாவின் ஹெலுங்ஜியாங் மாநிலத்தில் பிறந்தவர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டில் மகளிர் மேசைப் பந்து குழுப் போட்டியின் அரை இறுதி போட்டியில், அவரது துணையுடன், சிங்கப்பூர் அணி, 3:2 என்ற கணக்கில் வலிமையான தென்கொரிய அணியைத் தோற்கடித்து இறுதி போட்டியில் போட்டியிட்டது. அதனால், 48 ஆண்டுகளுக்குப் பின், சிங்கப்பூர் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் பெற முடிந்தது.

அன்று feng tianwei வெற்றி பெற்றவுடன், பெய்ஜிங் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் காதை துளைக்கும் அளவு கரவொலிகள் முழங்கின. சிங்கப்பூர் மேசைப்பந்து இரசிகர்கள் உற்சாகத்துடன் தேசிய கோடியை அசைத்து, சீன இரசிகர்களுடன் அத்தருணத்தைக் கோண்டாடினர். 1960ம் ஆண்டு, ரோம் மாநகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற வெள்ளி பதக்கத்திற்கு பிறகு, சிங்கப்பூர் 48 ஆண்டுகளாக ஒலிம்பிக் பதக்கம் பெறவில்லை. ஆனால், feng tianweiஇன் வெற்றி, சிங்கப்பூர் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் பெறுவதை உறுதிப்படுத்தியது.

அணி தோழர்களுடன், 48 ஆண்டுகால ஒலிம்பிக் கனவை நனவாக்குவதில், அவர் பெரும் மகிழ்ச்சியடைகிறார். அவர் கூறியதாவது,

இது, சிங்கப்பூர் விளையாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகும். நீண்டகாலமாக, சிங்கபூர் ஒலிம்பிக் பதக்கம் பெறவில்லை. எங்கள் பயிற்சி யாளர்கள், சிங்கப்பூர் ஒலிம்பிக் குழு, சிங்கப்பூர் மேசை பந்து சங்கம் ஆகியவை, எங்களுக்கு ஆதரவு அளித்தன. அவற்றுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

1 2