இந்த போட்டி சிங்கப்பூர் அணியைப் பொறுத்தவரை, பதற்றம் நிறைந்ததாக இருந்தது. நான்கு போட்டிகளுக்குப் பின், சிங்கப்பூரும் தென் கொரியாவும் 2க்கு 2 என்ற சமநிலையில் இருந்தது. கடைசி போட்டி வெற்றியைத் தீர்மானிக்க இருந்தது. அப்போது, சிங்கப்பூரின் ஒரே எதிர்பார்ப்பு, 19 வயதான feng tianwei மீது செலுத்தப்பட்டது.
தென் கொரியாவின் புகழ் பெற்ற வீராங்கனை Park Mi yongஐ எதிர்த்து, அவர் மிகவும் தன்னடக்கத்துடன் அமைதியாக இருந்தார். 47 நிமிட போட்டிக்குப் பின், feng tianwei, வெற்றி பெற்று, சிங்க்கபூரின் பதக்கக் கனவை நனவாக்கினார்.
சிங்கபூர் அணி வெற்றி பெற்றதில் அதிக பங்கு feng tianweiக்குரியது என்று போட்டிக்குப் பின், சிங்கப்பூர் மேசைப் பந்து அணியின் பயிற்சியாளர் liu guodong பாராட்டினார். முதல்முறையைக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இளம் வீராங்கனையான அவர், மிக முக்கிய தருணத்தில் நிர்ப்பந்தத்தை பொருட்படுத்தாமல், புகழ் பெற்ற வீராங்கனை Park Mi yongஐ வென்றார். இது மிகவும் மதிப்பிடற்கரியது.
இன்று மிக சிறப்பாக விளையாடிய வீராங்கனை, feng tianwei தான். தென் கொரிய அணி மிக வலிமையானது. ஆனால், அதனை அவர் கடைசி போட்டியில் வென்றார்.
தென்கொரியாவுடன் போட்டியிட்ட போது, சிங்கப்பூர் நாடு முழுவதிலும், 48 ஆண்டுகளாக ஏற்படாத ஒலிம்பிக்கிலான முன்னேற்றத்தை சிங்கப்பூர் எதிர்பார்த்து. அன்று, feng tianwei அவர்களை ஏமாற்றவில்லை. போட்டி முடிந்தவுடன், சீனாவிலுள்ள சிங்கப்பூர் தூதர் Nathan, மேசைப்பந்து அணியை சந்தித்துரையாடி, வாழ்த்துக்கள் தெரிவித்தார். 1 2
|