• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-26 14:31:07    
ஹங்கேரியின் நீச்சல் வீரர் Cseh

cri

23 வயதான அவர், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஆடவர் பல்வகை பாணி நீச்சல், 200 மீட்டர் ஆடவர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல், 200 மீட்டர் ஆடவர் பல்வகை பாணி நீச்சல் ஆகிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றார். தவிர, அவர் மூன்று புதிய ஐரோப்பிய சாதனை பதிவுகளையும் உருவாக்கினார். அவர் ஹங்கேரியின் ஒலிம்பிக் பிரதிநிதி குழுவின் வீரராக கூறப்பட்டார்.

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டின் நீச்சல் போட்டிகளில் 31 ஹங்கேரி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் Cseh மீது, மிக அதிக எதிர்பார்ப்பு காட்டப்பட்டது. அவர் வெற்றி பெற வேண்டிய பெரிய நிர்ப்பந்தத்தை கொண்டிருந்தார்.

ஜூலை 31, ஆகஸ்ட் 15ம் நாள், கடைசி போட்டி முடியும் வரை, Cseh முழு மூச்சுடன் பயிற்சி செய்து வந்தார். கால்முட்டியிலான காயத்தினால், போட்டிக்கு முந்தைய காலத்தில் அவரது நிலை சரியில்லை. அதனால், மூன்று வெள்ளி பதக்கங்கள் என்ற சாதனையில் அவர் மனநிறைவு பெற்றார்.

நான் எனது சாதனையைக் கண்டு மனநிறைவு அடைகிறேன். இதற்கு முன் நான் சிறந்த சாதனையை எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் காயத்தினால் நான் போதிய அளவில் தயாரித்துக் கொள்ளவில்லை. அதனால் மூன்று வெள்ளி பதக்கங்கள், எனக்கு அதிக மனநிறைவு தந்துள்ளன.

தங்கப பதக்கம் பெறாத போதிலும், அவர் மகிழ்கின்றார். எப்போதும் அவரைத் தாண்டி முதலிடம் வகித்த PHELPS பற்றி கூறாமல் இருக்க மாட்டார். தோற்கடிக்க முடியாதவர் என்று PHELPS பற்றிய மதிப்பீட்டைக் கேட்ட போது, அவர் கூறியதாவது,

தோற்கடிக்க முடியாதவர் என்ற நிலை இதுவரை நிலவவில்லை. அனைவரும் பிறரால் தாண்டி செல்லப்பட்டு தோற்கடிக்கப்பட கூடும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். நானும், அவரைத் தோற்கடிப்பவராக மாற கூடும் என்றார் அவர்.

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டில், 4 வெள்ளி பதக்கங்களும் 1 வெண்கல பதக்கமும் பெற்ற ஹங்கேரி பிரநிதிநி குழுவைப் பொறுத்தவரை, Cseh மிக பெரிய பங்காற்றினார் என்பதில் ஐயமில்லை.

1 2