• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-28 20:22:03    
ஏழை வள்ளல்

cri
ஏழை வள்ளல்

மே 12 சீன சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களனைவரும் தங்களது துயரத்தையும், இரக்கத்தையும், ஈடுபாட்டையும் பல்வேறு வழிகளில் காட்டினர். பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்ற உதவித் தொகையும், பொருட்களும் தாராளமாக வழங்கி, துயர்துடைக்க தயாராக இருப்பதை வெளிக்காட்டினர். தங்களுடைய அன்றாட தேவைகளுக்கே அல்லல்படும் சிலரது உதவித்தொகை பலரை நெகிழ வைத்துள்ளது. வீடில்லாமல் கிழிந்த ஆடைகளோடும் கலையிழந்த முகத்தோடும் காணப்படும் 60 வயதான Xu Chao, தன்னுடைய அன்பின் வெளிப்பாட்டால் பலரை கவர்ந்துள்ளார். ஒருநாள், தன்னிடமிருந்த 5 யுவானை உதவியாக அளித்த அவர், அதே நாள் மதியம் தனக்கு ஈகையில் கிடைத்த 100 யுவானையும் நன்கொடை பெட்டியில் போட்டார். அவருடைய தாராள மனப்பான்மை பற்றி உள்ளூர் செய்தியேடு தகவல் வெளியிட, மக்கள் பலர் அவரது செயலை பாராட்டி, தாராளமாக ஈகை செய்ய தொடங்கினர். அவரும் அவற்றை அப்படியே நிலநடுக்கத்திற்கு உதவித்தொகையாக கொடுக்க தொடங்கினார். அவரை போலவே காலணிகளை தேய்த்து சுத்தப்படுத்தி மெருகிடும் பெண்மணி ஒருவர் 60 யுவான் தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக பல நாட்களின் முழு வருமானத்தையும் நிலநடுக்க உதவித்தொகையாக வழங்கியுள்ளார். ஈகையை நம்பி வாழ்பவர்களே, சிச்சுவானில் பாதிக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கு உதவுவது என்பது அது சீனர்களிடத்திலுள்ள ஆழமான சகோதர பாசத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது.

1 2