• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-28 20:22:03    
ஏழை வள்ளல்

cri

08-08-2008

பல செயல்களை குறிப்பிட்ட நாட்களில், சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. சில வேலைகளை செய்ய நல்ல நாளும், அதற்கு தகுந்த வேளையும் வரட்டும் என்று பலர் தள்ளிபோடுவதுண்டு. சிலவேளை நாம் நினைத்தது நடக்காதபோது நேரம் சரியில்லை என்று சலித்து கொள்வதும் உண்டு. இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் 8 ஆம் நாளை, வாய்ப்புகளையும் மகிழ்ச்சியையும் அள்ளிக் கொண்டுவரும் நல்ல நாளாக சீனர்கள் கருதுகின்றனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் அந்த நாளில், அதிக எண்ணிக்கையிலான Shenzhen நகர இணைகள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக, நகர பொது விவகாரத்துறை தெரிவிக்கிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்குவது மட்டும் அன்றைய நாளின் சிறப்பல்ல. 8, 6 என்ற இரு எண்களும் நல்ல எண்களாக சீனர்களால் எண்ணப்படுவதும் இதற்கு காரணமாகும் என்று Daily sunshine செய்தியேடு வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாளின்போது 08–08-2008 என மூன்று எட்டு எண்கள் வருவதாலும், அவற்றின் கூட்டுத்தொகை 8 வருவதாலும், மகிழ்ச்சியும் வாய்ப்பும் அதிகமாக பெருகும் நாளாக நம்பப்படுகிறது. சீன சந்திர நாள்காட்டியின் படி, இந்த நல்ல நாள் 7 வது மாதத்தின் 8 வது நாளாகும். நாளொன்றுக்கு 60 திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படலாம் என்ற நிலையிருக்கும்போது மேலும் பலர் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அம்மாநிலத்திலுள்ள 6 மாவட்டங்களின் தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான சிறப்பு தேவைகளை கையாளும் சூழ்நிலைகளை ஆராய்ந்து வருவதாக உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.


1 2