• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-05 15:47:16    
துருக்கி ஒலிம்பிக் செய்தியாளர் அணி

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது உலகின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த, பத்தாயிரக்கணக்கான செய்தியாளர்கள் சீனாவுக்கு வருகை தந்தனர். இந்த மாபெரும் விளையாட்டு விழாவை அறிவிக்கும் வகையில், துருக்கியும் வரலாற்றில் மிகப் பெரிய செய்தியாளர் குழுவை அனுப்பியது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேச ஒலிபரப்பு மையத்தின் ஒலிப்பதிவு அறைக்கு வெளியே, துருக்கி தேசிய வானொலித் தொலைக்காட்சிச் சங்கத்தின் பாட்டொலி ஒலிக்கின்றது. கடந்த சுமார் 20 நாட்களாக, பல்வேறு விளையாட்டரங்கங்களில் மும்முரமாகப் பணி புரிந்த இந்தத் துருக்கிச் செய்தியாளர்கள், இப்போது, மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி தமது பணியின் வெற்றியைக் கொண்டாடினர். துருக்கியின் Hurriyet செய்தியேட்டின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் Esat Yilmaer, மூத்த விளையாட்டுச் செய்தியாளராக 35 ஆண்டுகளாக பணி புரிகிறார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான செய்திகளை அறிவிப்பது பற்றி பேசிய போது, அவர் கூறியதாவது,

முதலில், நான் பெய்ஜிங்குக்கு உளமார்ந்த வாழ்த்து தெரிவிக்கிறேன். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, இது வரையான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மிக வெற்றிகரமானதொன்றாகும். விளையாட்டரங்கங்களின் வசதிகள் மிகவும் முன்னேறியதாகவும் முழுமையாகவும் இருக்கின்றன. அதே வேளையில், செய்தி ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஆயத்த மற்றும் ஆதரவுப் பணிகள், நுணுக்கமாகவும் முழுமையாகவும் இருக்கின்றன. எங்களுக்கு அதிகமான வசதிகள் செய்து தரப்பட்டன. பெய்ஜிங், உலகிற்கு ஒரு உண்மையான தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வழங்கியுள்ளது என கூறலாம் என்றார் அவர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, வசதியான உபசரிப்புப் பணி, துருக்கி செய்தியாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அத்துடன், பேட்டிக்கான செய்திகளை சுதந்திரமாகச் சேகரிக்கும் சுற்றுச்சூழலும், அவர்களது தலைசிறந்த செய்தி அறிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. துருக்கி தேசிய வானொலித் தொலைக்காட்சிச் சங்கத்தின் செய்தித்துறை பிரிவின் இயக்குநர் Yuksel Degercan கூறியதாவது,

இந்த ஒலிமபிக் விளையாட்டுப் போட்டியில் வெளிநாடுகளின் செய்தி ஊடகங்களுக்கான உபசரிப்புப் பணி செவ்வனே மேற்கொள்ளப்பட்டது. எமது தங்கியிருக்கும் விடுதிகள், வெளியே செல்வதற்கான வசதி முதலியவை மிகவும் வசதியாக இருக்கின்றன. செய்தி மையத்தின் பணிச் சூழல், எமக்கு மனநிறைவு தந்துள்ளது. நாங்கள், இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த செய்தியாளர்களாகிய போதிலும், உணவில் பிரச்சினைகள் ஏதுமில்லை. தவிர, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பேட்டி காணும் சூழல் மிகவும் சுதந்திரமாக இருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் அனைவரும் தமது சொந்த திட்டப்படி பேட்டி காணலாம். நாங்கள் எந்தத் தடையையும் சந்திக்கவில்லை. எமது பணி தங்குதடையின்றி நடைபெற்றுள்ளது என்றார் அவர்.

1 2