துருக்கி தேசிய வானொலித் தொலைக்காட்சி சங்கத்தின் புகழ்பெற்ற விளையாட்டு விமர்சகர் Zafer Akyol, பல முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய அறிவிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதாவது,
நான் கலந்து கொண்டுள்ள அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மிகவும் தலைசிறந்தது. போக்குவரத்து மற்றும் தன்னார்வத் தொண்டர் பணிகளில் சீனா மேற்கொண்ட முயற்சி, எனது மனதை கவர்ந்துள்ளது என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய அறிவிப்புப் பணியில் ஈடுபட்ட துருக்கிச் செய்தியாளர் அணியில் பலர், முதல் முறையாக பெய்ஜிங்குக்கு வருகை தந்தனர். பெய்ஜிங் மாநகரின் நவீன வளர்ச்சி தோற்றம், அவர்களை வியப்படையச் செய்துள்ளது. பெய்ஜிங் பற்றிய தனது மனப்பதிவு சில பழமையான திரைப்படங்களிலிருந்து வந்தது. பெய்ஜிங் ஆழ்ந்த பண்பாடு மற்றும் நவீனத் தோற்றத்தைக் கொண்ட ஒரு சர்வதேச மாநகரமாகும் என்று துருக்கி தேசிய வானொலித் தொலைக்காட்சி சங்கத்தின் செய்தித் துறை பிரிவின் இயக்குநர் Yuksel Degercan பெய்ஜிங் வந்த பின் கண்டறிந்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகம் ஒரு நகரம் மற்றும் ஒரு நாட்டை அறிந்து கொள்வதற்கானதொரு வாய்ப்பு வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
சீனாவிலுள்ள துருக்கி Anadolu செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் Kamil Erdogdu, சீனாவில் பணி புரிந்து, பத்துக்கு மேலான ஆண்டுகளாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெய்ஜிங்கில் ஏற்பட்ட மாற்றத்தையும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக அது மேற்கொண்ட முயற்சியையும் அவர் நேரில் உணர்ந்து கொண்டார். தமது மற்றும் அனைத்து துருக்கி சக பணியாளர்களின் முயற்சியின் மூலம், உலகிற்கு ஒரு உண்மையான பெய்ஜிங்கைக் காட்ட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகை மேலும் செவ்வனே சீனாவை அறிந்து கொள்ளச் செய்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த மேலதிகமான நண்பர்கள் சீனாவுக்கு வருகை தந்து முன்பு, எதிர்பாராத காட்சிகளைக் கண்டறிந்தனர். செழுமையான பண்பாடு மற்றும் நீண்டகால வரலாற்றை சீனா கொள்கிறது என்று Kamil கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவை மேலும் அகலத் திறக்கச் செய்ய வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 1 2
|