• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 18:24:39    
ஒலிம்பிக் & சீனா அ

cri

பண்டைய சீனாவிலும், கிரேக்கத்திலும் ஒன்றேபோல் அமைந்த மற்றொரு அம்சம், விளையாட்டு கல்வியில் ஒரு பகுதியாக இருந்தது. ஷாவ் வம்சம், அதற்கு முந்தைய ஷியா வம்சம், ஷாங் வம்சம் ஆகிய காலங்களில், போர்க்கலை மற்றும் தற்காப்புக்கலைகள் கற்கும் இடங்களே, கல்வி பயிலும் இடங்களாக இருந்தன. சீனாவின் புகழ்பெற்ற தத்துவியலாளரும், கல்வியாளருமான கன்ஃபியூசியஸ் கூட மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இருந்தவராம். வில்வித்தை, தேரோட்டுதல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்த கன்ஃபியூசியஸ், மீன்பிடித்தல், வேட்டையாடல், மலையேறுதல் மற்றும் சுற்றுலா என்று மிகவும் துடிப்பும், ஆர்வமும் கொண்டவராக விளங்கியவராகக் கூறப்படுகிறது. தனது 3000 மாணவர்களுக்கு மதிநுட்பம், உடற்கட்டுக்கோப்பு, நன்னெறி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சமமாக கவனம் செலுத்தும் வகையில் அவர் ஆறு கலைகள் உள்ளடக்கிய கல்விமுறையை மேற்கொண்டார். சடங்குகள், இசை, வில்வித்தை, தேரோட்டுதல், எழுத்து, கணிதம் ஆகிய 6 பாடங்கள் அல்லது கலைகள் கற்பிக்கப்பட்டன, இவை ஆறும் ஒன்று மற்றதன் குறையை நிரப்புவதாக அமைந்தன. எடுத்துக்காட்டாக வில்வித்தையில் ஒழுக்கமும் நன்னடத்தையும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இன்றைக்கு நாம் விளையாட்டு வீரர்களிடையே எதிர்பார்க்கும் போட்டியிலான நேர்மை பண்பைப் போல் அன்றைக்கு கன்ஃபியூசியஸ் தன் மாணவர்களிடம் வில்வித்தையில் நன்னடத்தையும், ஒழுக்கமும் அவசியம் என்று அறிவுறுத்தினார். வெற்றி பெறுவது முக்கியம் ஆனால், அதிலும் உரிய சடங்குகள், வழிமுறைகளை கையாண்டு, அடக்காமா இருத்தல் அவசியம் என்பதை அவர் முன்னிறுத்தினார். மட்டுமல்ல, தன் மாணவர்களை நல்ல சத்தான உணவையும், உணவு பழக்கங்களையும் பேணுமாறு வலியுறுத்தினார். நாள்பட்ட உணவு, இறைச்சி ஆகியவற்றை தவிர்க்கவும், உணவருந்தும் போது பேசாமல் இருக்கவும் அவர் அறிவுரை கூறினார்.

கிரேக்கத்தின் தத்துவயிலாளரான பிளேட்டோவும் கூட இத்தகைய கொள்கைகளையும், வழிமுறைகளையும் முன்னிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சியும், சுகாதாரமும் கல்வியின் முக்கிய பகுதியாகவேண்டும், விளையாட்டுக்களின் மூலம் உடலையும், இசையின் மூலம் மன நிலையையும் மெருகேற்றவேண்டும் என்று பாடம் சொன்னவர் பிளேட்டோ. அவரது காலக்கட்டத்தில் கல்வியின் உள்ளடக்கமாக, ஜிம்னாஸ்டிக்ஸ் எனும் சீருடற்பயிற்சி இருந்தது. சுகாதாரமும், உணவு விதிமுறைகளும் அதில் பொதிந்திருந்தன. பொதுவாக நூலகங்களுக்கு அருகாமையில் அமைந்திருந்த கிரேக்க நாட்டு உடற்பயிற்சியகங்களில், தத்துவயியல், இசை மற்றும் இலக்கியம் கற்றுத்தரப்பட்டது.

1 2 3