• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 18:24:39    
ஒலிம்பிக் & சீனா அ

cri

பண்டைய சீன மற்றும் கிரேக்க கல்வியியலாளர்கள் பல்வேறு வயதினருக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை கல்வியின் ஒரு பகுதியாக வகுத்திருந்தனர். வரலாற்று தேவைக்காகவோ, தற்செயலாக நிகழும் சம்பவங்களை சமாளிக்கும் நோக்கிற்காகவோ, எப்படியாயினும் உழைப்பாற்றல், ராணுவ பயிற்சி, நடனம், உடற்பயிற்சி இவையனைத்தையும் பண்டைய சீன மற்றும் கிரேக்கர்கள் கல்வியோடு இணைத்து வளர்த்தனர். கிரேக்க சமூகத்தில் வேரூன்றியுள்ள ஒலிம்பிக் சிந்தனைகளை, சீனாவும் வரவேற்று ஏற்றுக்கொள்ள இவையெல்லாம் அடிப்படையாயிருந்தன என்றால் அது மிகையல்ல.

சீனாவின் நாகரிகம் எப்படி நீண்ட வரலாறு கொண்டதோ, அதன் விளையாட்டுக்களும் நீண்ட வரலாறு கொண்டவை என்பது நம்மில் பலர் அறியாதது. இன்றைக்கு ஒலிம்பிக்கில் சீனா ஒரு வளரும் நாடாக இருந்தபடியே உலகின் வளர்ச்சிய்டைந்த நாடுகளுக்கு சவால் விட்டு பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்க்கிறது என்றால், அதற்கு நாட்டின் பாரம்பரியத்தில் வேரூன்றிய விளையாட்டு மீதான ஆர்வமும், ஈடுபாடுமே காரணம் எனலாம்.


1 2 3