• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 21:23:20    
பெய்ஜிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri
நீங்கள் கேட்டு கொண்டிருப்பது, பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி.

பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடைந்தது. ஆனால், அதன் செல்வாக்கு என்றுமே நீடிக்கும். பெய்சிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது என்பது, பெய்சிங் மற்றும் முழு சீனாவுக்கும் பல மதிப்புள்ள மரபுச் செல்வங்களை ஏற்படுத்தும் என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பிலிப் கிரேவன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது

முதலாவதாக, பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு அரங்குகளும், சிறப்பாக கட்டியமைக்கப்பட்ட விளையாட்டு பயிற்சி மையங்களும், அவர்களுக்கு விட்டுச்செல்லப்படும். இரண்டாவதாக, பெய்சிங் மாநகரத்திலும் சீனாவின் இதர நகரங்களிலும் தடையற்ற வசதிகளின் கட்டுமானத்தை இது பெருமளவில் முன்னேற்றும். மாற்று திறனுடையோர் இதன் மூலம் பயனடைந்து, மேலும் வசதியாக வெளியே சென்றுவரலாம் என்றார் அவர்.

புள்ளிவிபரங்களின் படி, 2001ம் ஆண்டு தொடக்கம் பெய்சிங்கில் 14ஆயிரத்துக்கு அதிகமான தடையற்ற சிறப்பு வசதிகளை மறுசீரமைப்புத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வெண்ணிக்கை, கடந்த 20ஆண்டுகளில் இருந்ததற்கு விட சமமாகும். இது பற்றி, பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணை நிர்வாக தலைவர் டாங் ஷியௌசுவன் கூறியதாவது

音响D 2

பெய்சிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்கள் சென்றுவருவதற்கு எதிர்கொண்ட சிரமங்கள் இருந்த நிலைமை அடிப்படையில் நீக்கப்பட்டது. பெய்சிங் மாநகரம், முழு உலகின் மாற்று திறனுடையோர் மற்றும் மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படையில் தடையற்ற வசதிகள் கொண்ட நகரத்தை வழங்கியது என்றார் அவர்

பெய்சிங் பாராலிம்பிக் பற்றி, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் மிகேல் சகரா கூறியதாவது

தொடர்புடைய தகவல்களின் படி, சீன மாற்று திறனுடையோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் சீன அரசு அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சீனா ஐ.நாவுடன் மாற்று திறனுடையோரின் மனித உரிமை பற்றிய சர்வதேச பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. கடந்த சில திங்களுக்கு முன்பு, சீன மாற்று திறனுடையோரின் உரிமையைப் பேணிக்காக்கும் சட்டத்தை சீன தேசிய மக்கள் பேரவை ஏற்றுக்கொண்டது. சீன மாற்று திறனுடையோரின் வாழக்கை தரத்தை, பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி மேலும் முன்னேற்றும் என்றார் அவர்.

முழு உலகத்தை பொறுத்த வரை, பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அமைதித் தொடர்பு மற்றும் பரிமாற்ற மாநாடாகும். இது, பரஸ்பர புரிந்துணர்வை விரைவுபடுத்தி, நட்புறவை ஆழமாக்கியுள்ளது ஈரான் பாராலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் தலைவரும் ஈரான் பாராலிம்பிக் குழுவின் துணைத் தலைவருமான காபுர் கார்காரி இதை பாராட்டி கூறியதாவது

பாராலிம்பிக் விளையாட்டு்ப் போட்டி, மனித நேய எழுச்சியை உலகிற்கு காட்டிய மாநாடாகும். இதில் உலகின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த மாற்று திறனுடையோர் ஒன்று திரண்டனர். தவிர, பாராலிம்பிக் மூலம், வேறுபட்ட தேசிய இனங்கள், வேறுபட்ட நாட்டு மக்கள் ஆகியோருக்கு இடையிலான புரிந்துணர்வும் அவர்களுக்கிடையிலான தொடர்பும் ஆழமாகியுள்ளன. எனவே, ஒலிம்பிக்கை போல, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அமைதி மற்றும் நட்புறவு மாநாடாகும் என்றார் கர்காரி.

பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, இயல்பான உடல் கொண்ட பொது மக்களின் மனத்தை மாற்றியது. முழு மனித குலத்தின் எழுச்சி நிலை உயரத் துணை செய்துள்ளது. இஸ்ரேலிய மாற்று திறனுடையோர் விளையாட்டுச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் லிஹ் ஸ்னேய்தேர் அம்மையார் கூறியதாவது

மாற்று திறனுடையோர் இதை செய்தால், பொது மக்களும் அதைச் செய்ய வேண்டும். அவர்கள் மிகவும் மனவுறுதியாக இருந்ததைக் கண்ட போது, நாமும் மனவுறுதி கொள்வோம் என்றார் அவர்

ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் பொறுத்த வரை, பெய்சிங் பாராலிம்பி்க் விளையாட்டுப் போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 147நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கு அதிகமான மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். 147 என்ற எண்ணிக்கை, பாராலிம்பிக் வரலாற்றில் மிக அதிகமாகும். மாற்று திறனுடையோர் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு வசதி வழங்குவதற்காக, சைகைமொழி ஒளிபரப்பு அமைப்பு முறை பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதன்முறையாகும். மாற்று திறனுடைய உரிமை பற்றிய சர்வதேச பொது ஒப்பந்த நினைவுச் சுவர் நிறுவப்பட்டது. மேற்கூறிய நடவடிக்கைகள் அனைத்தும், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செல்வாக்கை உயர்த்தியதோடு, ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு புதிய உயிராற்றலை ஏற்படுத்தின என்றார் அவர்.

1 2