• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 21:23:20    
பெய்ஜிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri

நீங்கள் கேட்டு கொண்டிருப்பது, பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி.

மாற்று திறனுடையோருக்கான ஒலிம்பிக் விளையாட்டு வரலாறு, மனித குலத்தின் உயிர் மதிப்பின் மீதான நாகரிக வரலாறாகும். மாற்று திறனுடையோருக்கு மதிப்பு அளித்து, அவர்களைக் கவனித்து, அவர்களுக்கு உதவியளிப்பது, சமூக நாகரிக முன்னேற்றத்தின் முக்கிய அடையாளமாகும். பெய்சிங் பாராலிம்பி்க் விளையாட்டுப் போட்டி, உலகின் மாற்று திறனுடையோர் தமது கனவை நனவாக்குவதற்கு புதிய வாய்ப்பை உருவாக்கியது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கூறியதாவது

பெய்சிங் பாராலிம்பிக்கை முக்கிய வாய்ப்பாக கொண்டு, மனித நேய எழுச்சியை மேலும் வெளிக்கொணர்ந்து வருகிறோம். மாற்று திறனுடையோரின் நலன் மற்றும் உரிமையை பேணிக்காத்து, அவர்கள் சமத்துவ முறையில் சமூக வாழ்க்கையில் பங்கேற்று, சமூகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் பலன்களை கூட்டாக பகிர்ந்து கொள்வதை உத்தரவாதம் செய்ய, சீனா பாடுபடும். பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பல்வேறு நாட்டு மாற்று திறனுடையோர் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவை அதிகரிப்பதற்கான அரங்காகும். இது, உலக மாற்று திறனுடையோர் விளையாட்டு இலட்சியத்துக்கு மதிப்புள்ள எழுச்சி மற்றும் செல்வாக்கை ஏற்படுத்தும் என்றார் ஹு சிந்தாவ்

பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டு போட்டி நிறைவடைந்த பின், முழுச் சமூகமும் மாற்று திறனுடையோர்களில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று பெய்சிங் பாராலிம்பிக் தீபமேந்திய சியாங் சின்தியென் விருப்பம் தெரிவித்தார். அவர் சைகைமொழியில் கூறியதாவது

வாழ்வில் நிறைவும் வருத்தமும் உள்ளன. எமது மாற்று திறனுடையோரைப் பொறுத்த வரை, நாங்கள் துரதிருஷ்டசாலிகள் அல்ல; நாங்கள் சவால் மிக்கவர்களாகவே உள்ளோம். அனைவரும் எமது மாற்று திறனுடையோரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இன்றிரவு, பெய்சிங் பாராலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு, இது பிரிட்டனின் இலண்டன் மாநகரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றிரவு, ஓர் உலகம் மற்றும் ஒரு கனவுக்காக, நாங்கள் 2012ம் ஆண்டு இலண்டனின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சந்திப்போம். 4 ஆண்டுகளுக்கு பின், நாங்கள் சந்திப்போம்.


1 2