துக்கம் கடைப்பிடிக்கும் பறவை

ஷான்சி மாநில தலைநகர் தைய்யுவானில் ஒரு கடை சன்னலில் அடிபட்டு கடினமான மஞ்சள் நிறமான அலகு கொண்ட குருவியொன்று இறந்து விட்டது. உடனே அதனுடன் பறந்து வந்த குருவி அதனருகில் அமர்ந்து விழித்திருக்க தொடங்கியது. இந்த குருவியின் செயலை பார்த்த பெண்ணொருவர், இறந்த குருவிக்கு நல்லடக்கம் செய்வதாக சைகைகளால் விளக்க தொடங்கினார். அதனை அக்குருவி புரிந்துகொள்ளாது அப்படியே இருந்தது. சற்றுநேரம் சென்ற பின்னர் அங்கு வந்த, பறவைகள் கண்காணிப்பில் அனுபவம் கொண்ட ஒருவர் அவ்வகை குருவியினம் எப்போதும் இணையோடு பறக்கக்கூடியது என்றும் ஒன்று இறந்துவிட்டால் மற்றொன்று உண்ணாமலும் குடிக்காமலும் ஒரு நாள் அதற்கு பக்கத்திலேயே கவலையோடு அமர்ந்திருக்கும் என்றும் விளக்கினார். பறவைகள் கூட இறந்தோருக்கு துக்கம் கடைப்பிடிப்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது.
1 2
|