• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-18 22:28:31    
துக்கம் கடைப்பிடிக்கும் பறவை

cri

பூங்கா வணிகவளாகம்

கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தாலும், குதிகால் உயரமான செருப்பு அணிந்து வரும் பெண்களுக்கு சுற்றி அலைந்து பொருட்களை வாங்குவது என்பது சற்று வருத்தத்தை தான் கொடுக்கும். கடைக்குள்ளேயே வண்டியில் சுற்றி திரிந்து பொருட்களை வாங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கேட்பதற்கே இனிமையாக இருக்கின்றபோது அதனை நனவாக்கியிருக்கும் ஷாங்காய் சிவப்பு நட்சத்திர வணிகவளாகத்தில் பொருட்கள் வாங்க சென்றால் எப்படியிருக்கும்? மிகவும் சிறப்பாகத் தான் இருக்கும். 6 மாடிக் கட்டடிடமான இந்த வணிக மையத்தில் 14 மீட்டர் நீளமான சுற்றிவரும் தொடர்வண்டியில் எல்லா கடைகளுக்கும் சென்று பொருட்களை வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உலகிலேயே தொடர்வண்டி அமைக்கப்பட்டு இயங்குகின்ற முதல் வணிகவளாகம் இதுவாகும் என்று உள்ளூர் செய்யேடு தெரிவிக்கிறது. அத்தோடு இந்த வணிக மையத்தின உள்வடிவமைப்புகள் மரங்களோடமைந்த பாயும் நீரூற்றுகளோடு பூங்காப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது அதன் மற்றொரு சிறப்பு. கடை என்பதை விட பூங்காவுக்கு சென்றுவருகின்ற உணர்வை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனராம். கடைக்குள்ளேயே பறக்கும் தட்டில் பறந்து சென்று பொருட்கள் வாங்கும் நிலையும் வரும் காலம் தொலைவில் இல்லை.


1 2