அதிகமான இனப் பெருக்கம் மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மைகள் வாய்ந்ததால், தைவானின் fuchang பன்றிகள் உலகில் புகழ் பெற்றுள்ளன. இத்தகைய பன்றிகளை தைவானிலிருந்து yulin நகரத்துக்கு கொண்டுவருவது, இரு கரை வேளாண் துறையின் ஒத்துழைப்பு ஆய்வு மண்டலத்தின் முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாகும். ஒரு கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இத்திட்டப்பணியில், தைவான் மற்றும் பெருநிலப்பகுதியின் இரு நிறுவனங்கள் கூட்டாக முதலீடு செய்துள்ளன. இரு கரை வேளாண் துறையின் ஒத்துழைப்பு ஆய்வு மண்டலத்தில் இனப் பெருக்கத்துக்காக ஆண் பன்றி ஆராய்ச்சி மையம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டப்பணியின் முதல் கட்டம் முடிந்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்கள் ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன என்று இத்திட்டப்பணியைச் சேர்ந்த பெருநிலப்பகுதியின் பொறுப்பாளர் lvxianwen தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தைவானிலிருந்து fuchang வகை ஆண் பன்றிகளை உட்புகுத்துவதன் மூலம், குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் தைவானுக்கிடையிலான பன்றி வளர்ப்புக்கான தொழில் நுட்ப இடைவெளி குறையும். எனவே, Yulin நகரம் ஏன் குவாங்சி தன்னாட்சிப் பிரதேசத்தின் பன்றி வளர்ப்பு நிலை பெரிதும் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
1 2 3
|