• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-23 15:54:39    
சான் சோ உயர் நிலை தொழிற்கல்வி மண்டல அ

cri

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ச்சியாங் சூ மாநிலத்தின் சான் சோ நகரில், நாடு முழுவதிலும் புகழ்பெற்ற உயர் தொழிற்கல்வி மண்டலம் உள்ளது. சான் சோ அறிவியல் கல்வி நகரமாக இது அழைக்கப்படுகின்றது. இந்த மண்டலத்தில், பல தொழிற் பள்ளிகள் அமைந்துள்ளன. வேகமான பொருளாதார வளர்ச்சியில், சிறப்பு தொழில் திறமைசாலிகளுக்கான தேவையை நிறைவேற்றும் வகையில், கல்வி, ஆய்வு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை ஒன்று இணைக்கும் தளமாக இது மாறியுள்ளது.

சீனாவின் முக்கிய பொருளாதார வளர்ச்சிப் பிரதேசமான யாஞ்சி ஆற்று முகத்துவாரப் பிரதேசத்தில் சான் சோ நகரம் அமைந்துள்ளது. ஷாங்காய், நான் கிங், சூ சோ முதலிய பொருளாதாரத்தில் வளர்ந்த நகரங்களை ஒட்டியமைந்துள்ள இதற்கு மேம்பாடுகள் அதிகம். 2002ம் ஆண்டு முதல், உயர் நிலை தொழிற்கல்வி வளர்ச்சி சீர்திருத்தத்தின் பரிசோதனைப் பிரதேசமாக கொள்ளும் வகையில், சான் சோ நகரில் அறிவியல் கல்வி மண்டலத்தைக் கட்டியமைக்க துவங்கியது. தற்போது, இந்த மண்டலத்தில் தகவல் தொழில் நுட்பம், நெசவு ஆடை, இயந்திரம் முதலிய துறைகளுடன் தொடர்பான 5 உயர் நிலை தொழிற் பள்ளிகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், இம்மண்டபம் மிக விரைவாக வளர்ந்துள்ளது. கட்டிட நிலப்பரப்பு 20 இலட்சம் சதுர மீட்டரை நெருங்கியது என்று மண்டல நிர்வாக ஆணைய அலுவலகத்தின் தலைவர் lu jin lin கூறினார். அவர் கூறியதாவது

எமது சான் சோ உயர் நிலை தொழிற்கல்வி மண்டலத்திலுள்ள 5 பள்ளிகள், முழு நாட்டிலுள்ள 14 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து மாணவர்களைச் சேர்க்கின்றன. தற்போது, 76 ஆயிரம் மாணவர்கள் இங்கே கல்வி பயில்கின்றனர். பல்வகை வசதிகள் நிறைந்த மண்டலமாக இது மாறியுள்ளது என்றார் அவர்.

1 2