• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-25 09:16:55    
வெவ்வேறான நாட்டினராயினும் ஒரே புன்சிரிப்பு

cri

பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது தன்னார்வத் தொண்டர்கள் பலர் அதற்கு சேவை புரிந்தனர். அவர்கள் வெவ்வேறான நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் தோல் நிறம் வெவ்வேறானதாக இருந்தாலும் சரி, அவர்கள் மனதிலிருந்து வெளிப்பட்ட புன்சிரிப்புடன் விருந்தினர்களை வரவேற்றனர். சையீத் ஹசின்பூர் என்பவர் அவர்களில் ஒருவராவார். சீன மொழி பேசுகின்ற அவர் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒரேயொரு ஆப்கான் தன்னார்வத் தொண்டர் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர் மொழிபெயர்ப்பு தன்னார்வத் தொண்டராவார். ஆப்கான் மற்றும் ஈரான் விளையாட்டு வீரர்கள் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது அவர் மொழிபெயர்ப்புச் சேவை புரிந்தார். சீனா அவர்தம் பழைய நண்பர் போல் இருக்கின்றது. 2000ம் ஆண்டு அவர் சீனாவில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 2005ம் ஆண்டு பட்டம் பெற்று நாடு திரும்பினார். 2006ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் ஏற்கனவே ஆப்கான் வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரிந்த அவர் மேற்படிப்புக்காக மீண்டும் சீனாவுக்கு வந்தார். தற்போது அவர் பெய்ஜிங் மொழி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுத் துறையில் ஆய்வாளராக அவர் பயில்கின்றார். சீனாவின் பல்கலைக்கழகத்தில் கல்வி பெற்ற அனுபவத்தால் மேற்படிப்புக்கான வாய்ப்பு கிடைத்த போது அவர் மீண்டும் சீனாவைத் தெரிவு செய்துள்ளார்.

என்னுடைய ஆய்வுத் துறையை விரைவாக முடிவு செய்ய வேண்டும். மற்ற நாடுகளுக்கு சென்றால் நான் முதலில் மொழிப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும். ஆனால் சீனாவில் மேற்படிப்பு பயின்றால் மொழிப் பிரச்சினை எனக்கு இல்லை. சீனாவிலான வாழ்க்கை வழக்கம் எனக்கு ஒத்தது. நான் சீனாவை விரும்புகின்றேன். ஆகவே மீண்டும் சீனா வந்துதுள்ளேன். இங்கே எனக்கு பல நண்பர்கள் உண்டு. சீனா நான் நன்றாக அறிந்து கொண்ட நாடாகும் என்றார் அவர்.

பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தன்னார்வத் தொண்டராக அவர் சேவை புரிந்தார். தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு சேவை புரிவதில் அவர் வெவ்வேறான உணர்வுகளை பெற்றுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வேறுபட்டதாக உணரப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை உணரலாம். ஆனால் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பார்க்கும் போது பலப் பல முறை மாற்று திறனுடைய வீரர்களால் மனமுருகச் செய்யப்பட்டுள்ளோம் என்றார் அவர்.

பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முஸ்லிம்கள் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடிய நோன்பு திங்களில் நடைபெற்றது. இந்த திங்களில் முஸ்லிம் மக்கள் பகலில் எதையும் உட்கொள்ள மாட்டார்கள். சையீத் பக்திச் சிரத்தையுடன் கூடிய முஸ்லிமாவார். அவர் விரும்பிய மத நம்பிக்கைக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு மிகவும் மதிப்பு அளித்தது. அவருடைய கோரிக்கையின் படி அவர் பணிபுரியும் நேரம் சரிப்படுத்தப்பட்டது. இதற்கு சையீத் மிகவும் மனநிறைவு அடைந்தார். இது பற்றி அவர் கூறியதாவது.

1 2