• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-25 09:16:55    
வெவ்வேறான நாட்டினராயினும் ஒரே புன்சிரிப்பு

cri

நோன்பு திங்களில் நான் பிற்பகல் வேளையில் பணி புரிந்தேன். ஏனென்றால் பிற்பகல் விளையாட்டுப் போட்டிகள் தாராளமாக நடைபெற்றன. தங்கப் பதக்கங்கள் அப்போதுதான் வழங்கப்பட்டன. அப்போது நான் கண்டிப்பாக போட்டி நடைபெற்ற அரங்கில் பணி புரிய வேன்டும். நோன்புக்காக சிறப்பு கோரிக்கையை முன்வைத்த பின் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு எனக்கு அனுமதி தந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆப்கான் விளையாட்டு வீரர் ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். பளுத்தூக்குதல் போட்டியில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் சையீத் அவருடைய பங்கை மதிப்பிடும் போது சாதனை முக்கியமில்லை. சக நாட்டவர் பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதை கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக சையீத் கூறினார்.

அவர் பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டமை எனக்கு மிகவும் மன நிறைவு தந்தது. பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட போது பறவைக் கூடு என்னும் விளையாட்டு அரங்கில் இருந்தேன். ஆப்கான் பிரதிநிதிக் குழு துவக்க விழாவில் நுழைந்த போது நான் மிகவும் மனமுருகினேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்றார் அவர்.

மேற்படிப்பு முடிவடைந்த பின் சையீத் ஆப்கான் திரும்புவார். வேலை காரணமாக மீண்டும் சீனாவுக்கு வர வேண்டுமானால் மிகவும் மகிழ்ச்சியடைவது திண்ணம் என்று அவர் கூறினார். அவருக்கும் சீனாவுக்குமிடையில் ஆழந்த நட்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே சீன வானொலி நிலையத்தின் மூலம் அவருடைய சக நாட்டவர்களுக்கு அழைப்பு விடுக்க அவர் விரும்பினார். மக்கள் சீனா வந்து சீனாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சீனா வர வேண்டிய நாடு. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் ஒரே மாதிரி சிறந்தவை. வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக சீனா வாருங்கள் என்று அவர் சீன வானொலி மூலம் அவர்தம் சக நாட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


1 2