• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-08 09:05:11    
உருமுச்சி நகரில் பணி புரியும் அன்னிய இளைஞர்கள் இருவர்

cri

சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் பணி புரியும் Ungaro Florence, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அவரது சக பணியாளர் Harmen Krediet, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார். படிப்பை முடிப்பதற்கு முந்திய பயிற்சியை நிறைவேற்ற, Jin Feng அறிவியல் தொழில் நுட்ப கூட்டு நிறுவனத்தை அவர் தெரிவு செய்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் திங்கள் அவர் உருமுச்சிக்கு வந்தார்.

இது வரை, இந்நிறுவனத்தில் சில திங்கள் காலமாக அவர் வேலை புரிந்துள்ளார். அவரின் பயிற்சிக்காலம் நிறைவடையவுள்ளது. சிங்கியாங்கின் தனிச்சிறப்புடைய சிற்றுண்டியை தாம் மறக்க போவதில்லை என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவின் உணவு வகைகளை மிகவும் நேசிக்கின்றேன். சிங்கியாங் உணவு வகைகள், சீனாவின் இதர பிரதேசங்களின் உணவு வகைகளி்லிருந்து வேறுபட்டவை. ஏனெனில், இங்குள்ள உணவுகளில், சீன உணவுகளின் தனிச்சிறப்பும், கஸகஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் உணவுகளின் தனிச்சிறப்பும் கலந்து இணைகின்றன. இங்குள்ள சிற்றுண்டி சிறப்பானது" என்றார், அவர்.

1 2 3