• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-08 09:05:11    
உருமுச்சி நகரில் பணி புரியும் அன்னிய இளைஞர்கள் இருவர்

cri

Harmen Kredietவை போல், Erik De Vrij என்னும் நெதர்லாந்து நாட்டவர், Jin Feng கூட்டு நிறுவனத்தில் வேலை புரிகின்றார். முன்னதாக, நெதர்லாந்து நாட்டில் உள்ள கப்பல் போக்குவரத்து கூட்டு நிறுவனத்திலும், காற்று ஆற்றல் மின் உற்பத்தி சேவை கூட்டு நிறுவனத்திலும் அவர் வேலை செய்திருந்தார். வணிகப் பயணத்தில், அவர் உருமுச்சி நகரில் உள்ள Jin Feng கூட்டு நிறுவனத்துக்கு வந்து, இந்நிறுவனத்தின் திட்டப்பணிகளால் ஈர்க்கப்பட்டார். நெதர்லாந்து திரும்பிய பின், அவர் வேலையிலிருந்து விலகினார். இதற்கு பின் அவர் Jin Feng கூட்டு நிறுவனத்துக்கு வந்து, இந்நிறுவனத்தின் சர்வதேச அலுவல் பிரிவின் மேலாளராக பதவி ஏற்றார். அவர் கூறியதாவது:

"சீனா, விரைவாக வளர்ந்து வரும் சந்தையாகும். Jin Feng கூட்டு நிறுவனத்துக்கு நான் வருவதற்குக் காரணம் இதுவாகும். ஒரு ஐரோப்பிய கூட்டு நிறுவனத்தில் பகுத்தாராய்பவராக வேலை செய்திருந்தேன். சீனாவில் நிகழ்ந்ததை கேள்விபட்டேன். எடுத்துக்காட்டாக, சீனப் பொருளாதார வளர்ச்சி. ஒரு புறம், சீனா மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றேன். மறு புறம், நான் கற்றுக் கொண்ட துறை, Jin Feng கூட்டு நிறுவனத்தின் பணிக்கு ஏற்றது. சீன சக பணியாளர்களுடன் இணைந்து, காற்று ஆற்றலைப் பயன்படுத்தி, சீனா மற்றும் இதர நாடுகளுக்காக தரமிக்க பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். பல மேலை நாடுகளில், சீனப் பொருட்களின் தரம் குறைவு என்று கருதப்படுகிறது. இக்கருத்து தவறு என்பதை இந்நாடுகளுக்கு நிரூபிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இக்கூட்டு நிறுவனத்தில் சேர்வதற்கு இது இன்னொரு காரணமாகும்" என்றார், அவர்.

1 2 3