• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-09 23:28:21    
புதிய யுவான் பணநோட்டு

cri

4,060 ஆண்டுகள் சிறைத் தண்டனை

குற்றம் இழைத்தவர்கள் திருந்தி வாழவும், பிறர் அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கச்செய்வும் தான் குற்றறவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை தவறாக, பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டள்ள ஜேம்ஸ் கெவின் என்பவருக்கு 4,060 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. இத்தண்டனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டிய ஜேம்ஸ் கெவின், 3,309 ஆம் ஆண்டு தான் பிணையில் விடுதலையாகும் தகுதி பெறுவார். ஏறக்குறைய 6,068 ஆம் ஆண்டு முழு விடுதலை பெறுவார். இவ்வளவு ஆண்டுகள் ஒருவரால் உயிரோடிருந்து சிறைத்தண்டனை அனுபவிக்க முடியாது என்றாலும் இத்தகைய தண்டனை பிறருக்கு பாடமாக அமையவேண்டும் என்றே வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடுமையான தண்டனைகள் பலருக்கும் படமாக அமைந்து, குற்றமற்ற உலகை தழைக்க செய்யட்டும்.


1 2