• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-10 09:16:06    
Pamirs பீடபூமியில் வாழும் தாஜிக் இன மக்கள்

cri

கி.மு. 10வது நூற்றாண்டுக்கு முன், பழங்காலத் தாஜிக் இன மக்கள், Pamir பீடபூமியில் வாழ்ந்தனர். தாஜிக் இன மக்கள், சீனாவில் தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வரும் வெள்ளை இன மக்கள் ஆவர்.

தாஜிக் இன மக்கள், தனிச்சிறப்பு வாய்ந்த சொந்த தேசிய இனப் பண்பாட்டைப் படைத்துள்ளனர். பாரம்பரிய தேசிய இன விழாக்கள், அவர்களின் பண்பாட்டில் முக்கிய பகுதியாகும். தாஜிக் இனம், இஸ்லாமிய மதத்தின் இஸ்மாயி மதப் பிரிவைச் சேர்ந்தது. அதனால், தாஜிக் இன மக்களும், பாரம்பரிய விழாவான குர்பான் விழாவைக் கொண்டாடுகின்றனர். tashikuergan தாஜிக் தன்னாட்சி மாவட்டத்தின் தாஜிக் இனப் பண்பாட்டு மையத்தின் பணியாளர் aibuli அறிமுகப்படுத்தியதாவது,

குர்பான் விழாவின் போது, ஆடுகளைக் கொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டின் ஆரம்ப காலத்திலும், ஆட்டுக் குட்டியைத் தேடி, அதனை, கூரைக்கு தூக்கிச் சென்று கொல்கின்றனர். மங்கலச் சின்னத்துக்காக, அந்த ஆட்டுக் குட்டியின் ரத்தத்தை, குழந்தைகளின் நெற்றி மற்றும் முகத்தில் பூசுகின்றனர் என்றார் அவர்.

தாஜிக் இன மக்கள், பாரம்பரிய விழாக்களில் சொந்த இனத்தின் தனிச்சிறப்புகளைக் காட்டுவது மட்டுமல்ல, நாளாந்த செயல்பாடுகளில், குறிப்பாக மற்றவரை சந்திக்கையில் மேற்கொள்ளும் நடைமுறைகளில், நீண்ட வரலாறு உடையவர்கள் ஆவர். ஒரே வயதுடைய ஆண்களும் பெண்களும் சந்திக்கும் போது, பெண்கள், ஆண்களின் உள்ளங்கையை முத்தமிட வேண்டும். பெரியோரும் குழந்தைகளும் சந்திக்கும் போது, பெரியோர், குழந்தைகளின் காதை முத்தமிட வேண்டும். பெரியோருக்கான மதிப்பைத் தெரிவிப்பதற்காக, குழந்தைகள் அவர்களது உள்ளங்கையை முத்தமிட வேண்டும்.

1 2 3