• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-10 09:16:06    
Pamirs பீடபூமியில் வாழும் தாஜிக் இன மக்கள்

cri

Tashikuergan வட்டத்தில் வாழும் தாஜிக் இன அறிஞர் Madalhanனின் வீடு, உண்மை தாஜிக் குடியிருப்பு வீடாகும். கற்களால் கட்டியமைக்கப்பட்ட அவர்களது வீடுகள், எளிமையானதாக இருக்கின்றன. ஹான் இன மக்களின் வீடுகள் தெற்கு நோக்கி அமைவதிலிருந்து வேறுபட்டு, அனைத்து தாஜிக் இன மக்களின் வீட்டு வாயில்களும் கிழக்கு நோக்கி அமைகின்றன. அது, என்றுமே ஒலியை எதிர்நோக்குவது என்று பொருட்படுகிறது.

தாஜிக் இன மக்கள், கழுகை, வீரர் சின்னமாகக் கருதுகின்றனர். அவர்களது பாரம்பரிய சமூகப் பண்பாட்டில், கழுகு பற்றிய அதிகமான கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் பரவியுள்ளன. தாஜிக் இன மக்களின் நாட்டுப்புற இசைக்கருவியான கழுகுப் புல்லாங்குழலுக்குப் பின், ஒரு அழகான பழங் கதை இருக்கிறது என்று Madalhan கூறினார்.

நெடுங்காலத்துக்கு முன், இங்கு ஓர் ஆணும் ஒரு பெண்ணும், ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால், நகரக் கோட்டையின் உரிமையாளர் அதை அறிந்து கொண்ட பின், அவர்களைப் பிரித்தார். பின்னர், இந்தப் பெண், நாள்தோறும் தண்ணீர் கொண்டு வரும் போது, இந்த இளங்காளையின் பாட்டொலியைக் கேட்டு மகிழ்வார். இந்த இளங்காளைக்கு ஒரு கழுகை உண்டு. தன் சிறகு எலும்பைக் கொண்டு, புல்லாங்குழலைத் தயாரித்தால், ஊதி இசைக்க முடியும் என்று அவரது கழுகு இறந்த போது, அவரிடம் கூறியது. இந்த இளங்காளை, அவரது கழுகின் சிறகு எலும்பால், புல்லாங்குழலைத் தயாரித்தார். அவர் இந்தப் புல்லாங்குழலைக் கொண்டு, அருமையான ராகங்களை இசைத்தார். இந்தப் பெண், கழுகு வானில் பறப்பது போல, நடனம் ஆடுவார். இவ்வாறு, கழுகுப் புல்லாங்குழலும் கழுகு நடனமும் உண்டாயின என்றார் அவர்.

விற்பனையின் போது, கழுகுப் புல்லாங்குழல், இணை இணையாக விற்கப்படும். இதன் மூலம், காதலுக்கான மன உறுதி வெளிப்படுத்தப்படுகிறது. தாஜிக் இன மக்கள், ஆடல் பாடல்களை சிறப்பாக விரும்புகின்றனர். விழா மற்றும் திருமணங்கள், ஆடல் பாடல்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆண்களும் பெண்களும், பெரியோரும் குழந்தைகளும், ஆடல் பாடலில் கைதேர்ந்தவர்களாவர்.

தவிர, பீடபூமியிலுள்ள தாஜிக் இன மக்கள், தாய்நாட்டைப் பாதுகாக்கும் பாரம்பரிய வீரசாகசத்தையும் கொண்டாடி வருகின்றனர். Pamir பீடபூமி நீண்ட எல்லை கோட்டைக் கொண்டது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, தாஜிக் இன விவசாயிகளும் ஆயர்களும் முன்முயற்சியுடன் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உதவி செய்து, நாட்டைப் பாதுகாக்கும் முக்கியமான கடமைக்குப் பொறுப்பேற்று வருகின்றனர். Tashikuergan மாவட்டத்தின் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் Moni Tablit கூறியதாவது,

ஈராயிரம் ஆண்டுகளாக, எல்லைப் பிரதேசத்தைப் பாதுகாப்பது, தாஜிக் இன மக்கள் நாட்டுக்கு ஆற்றிய மிகப் பெரிய பங்காகும். தாஜிக் இன மக்கள், பெரும் நாட்டுப்பற்றைக் கொண்டவர்களாவர். அவர்கள், தாய்நாடு மற்றும் சொந்த ஊரை விரும்புகின்றனர். அவர்கள், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உதவி செய்து, நாட்டின் எல்லைக் கோட்டைப் பாதுகாத்து வருகின்றனர் என்றார் அவர்.


1 2 3