• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-14 09:46:01    
நலவாழ்வுக்கான சில குறிப்புகள்

cri
சிறுநீரகம் மனிதரின் முக்கிய உடல் உள் உறுப்புகளில் ஒன்றாகும். உடலிலுள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்குப் பொறுப்பான சீறுநீரகம், மனிதரின் இரத்த அழுத்தத்தையும் உடல் உள்புற சூழலையும் சரிப்படுத்தி, இரத்தம், எலும்பு முதலியவற்றின் பயனுக்கு முக்கிய பங்கு ஆற்றுகின்றது. உலக அளவில் தீராத சிறுநீரக நோய் பரவல் செய்யும் போக்கு உயரும் நிலையில் உள்ளது என்று சீன சுகாதார அமைச்சின் தீரா நோய் பிரிவின் தலைவர் li xun எடுத்து கூறினார். வாழ்க்கை மற்றும் பணி வசதிகளின் மேம்பாட்டுடன், மக்களின் வாழ்க்கை வடிவத்தில் நியாயமற்ற மாற்றங்கள் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். எடுத்துக்காட்டாக, கூடுதலாக சில வகை சத்துணவுகளை உட்கொள்வது, நீண்டகாலமாக உயர் அழுத்ததுடன் வாழ்வது, உறக்க பற்றாக்குறை, புகை பிடிப்பது, மது அதிகமாக அருந்துவது முதலியவை தீராத சிறுநீரக நோய்க்கு காரணங்களாகும். Li xun மேலும் கூறியதாவது

தீராத சிறுநீரக நோயின் பாதிப்பையும் பல்வேறு துறைகளில் இந்நோய் ஏற்படுத்தும் அச்சுறுத்தலையும் மென்மேலும் ஆழமாக அறிந்து கொண்டுள்ளோம். இதய நோய், புற்று நோய், சர்க்கரை நோய் முதலியவற்றுக்கும். நமது உடல் நலத்தைக் கடுமையாக அச்சுறுத்தும். மற்றொரு நோய் இதுவாகும். ஆகவே சிறு நீரக நோய் உலக அளவிலான பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது என்றார் அவர்.

சீனாவிலும் இந்நோய் பற்றிய நிலைமை கடுமையாக உள்ளது. சீன மருத்துவ சங்கத்தின் சிறுநீரக நோய் பிரிவின் தலைமைச் செயலாளரான முனைவர் zhang you kang கூறியதாவது

சீனாவில் சிறுநீரக நோயின் நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது. மதிப்பீட்டின் படி, தீராத சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் சுமார் 10 விழுக்காடாகும். இருந்த போதிலும், பொது மக்களில் 10 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நோய் பற்றி தெரிந்து கொண்டுள்ளனர் என்றார் அவர்.

துவக்கக் காலத்திலேயே இந்நோயைக் கண்டுபிடித்து இதனை முன் கூட்டியே தடுப்பது தான், தீராத சிறுநீரக நோயைதடுத்து சிகிச்சை அளிக்கும் மிக சிறப்பான வழிமுறையாகும் என்று பேராசிரியர் zheng fa lei கருதுகின்றார். அவர் கூறியதாவது

துவக்க நிலையில் தீராத சிறுநீரக நோயின் நிலைமை பற்றி தெளிவாகக் கண்டுபிடிக்க இயலாது. ஆனால், நோய் நிலைமையின் மாற்றத்துடன் சிக்தி குறைவு, உடல் நலக் குறைவு, பசியின்மை, தூக்கமின்மை, நீர்கோர்வை முதலியவை இந்நோயின் அறிகுறிகளாகும் என்றார் அவர்.

மேற்கூறிய இந்த அறிகுறிகளை வைத்து ஒருவர் சிறுநீரக நோய்வாய்ப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று பேராசிரியர் சென் கூறினார். ஆகையால், துவக்க நிலையில் உடல் பரிசோதனை மேற்கொள்வது மிக முக்கியமானது. குறிப்பாக ஆண்டுதோறும், உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய் நிலைமை இல்லாவிடில், 40 வயதுக்கு பின் ஆண்டுதோறும் ஒரு வழமையான சிறுநீர் மற்றும் சிறுநீரகம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழத்த நோய், நீரிழிவு நோய் ஆகியவை இருந்தால், ஆண்டுதோறும், முறையே வழமையான சிறுநீர் பரிசோதனை, சிறுநீரக பயன் பரிசோதனை ஆகியவற்றை குறைந்தது 2 முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

தவிர, வாழ்க்கையிலும் பணியிலும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் வெளியேற்றத்தைத் தள்ளிப்போடும் வழக்கம் உடல் நலனை பாதிப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

1 2