
நோய்வாய்ப்பட்டால் அவசரப்பட வேண்டாம். தற்போது பல தீராத சிறு நீரக நோய்களுக்கு பயன் தரும் சிகிச்சை வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை முற்றிலும் தீர்க்க முடியாத போதிலும், சரியான சிகிச்சை பெறுவது, சில வாழ்க்கை வழக்கங்களை மாற்றுவது ஆகியவற்றின் மூலம் நோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம். நோயாளிகளின் சிறுநீரக திறன் குறைந்துவிடும் வேகமும் தள்ளிப்போடப்படலாம். பேராசிரியர் சென் கூறியதாவது
சிறுநீரக நோய் ஒரு பயங்கரமான நோயாகும். இந்நோயின் இறுதி கட்டத்தில், நோயாளி கடுமையாக பாதிக்கப்படுவார். ஆனால், துவக்க நிலையில், இந்நோயைக் கண்டுபிடித்து இதனை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தினால், நோயாளிகள் சாதாரண மக்களைப் போல் வாழ்ந்து பணி புரியலாம். வாழ்க்கைத் தரமும் பணி திறனும் நிலைநிறுத்தப்படலாம். முன்கூட்டியே நோயைக் கண்டுபடித்து தடுத்து சிகிச்சை பெறுவது மிக முக்கியமானது என்றார் அவர். 1 2
|