• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-17 10:41:21    
சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சிறுபான்மைத் தேசிய இன இளைஞர்கள்

cri
சீனாவின் சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிராமிய மக்கள் தொகையில், சிறுபான்மைத் தேசிய இன விவசாயிகள் மற்றும் ஆயர்களின் மக்கள் தொகை அதிகமாகும். தெற்கு சின்கியாங்கில், hetian, kashi முதலிய பிரதேசங்களில், சிறுபான்மைத் தேசிய இன விவசாயிகள் மற்றும் ஆயர்களின் மக்கள் தொகை, மொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காட்டுக்கு மேலாகும். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, கிராமப்புறங்களின் உபரி உழைப்பு ஆற்றலை பயன்படுத்தும் விதமாக சீனாவின் உள்பிரதேசத்திற்குச் சென்று பணி புரிவதை, சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு, 2006ம் ஆண்டு முதல், ஏற்பாடு செய்து வருகிறது.

பாரம்பரிய கருத்தால் பாதிக்கப்பட்டு, முன்பு, தென் சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தெற்கு பகுதியில் வாழும் சிறுபான்மைத் தேசிய இன மக்கள், இடம் பெயர்தலை விரும்பாதவர். அவர்கள், தங்களது நிலத்திலிருந்து பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. இந்நிலைமை குறித்து, அப்பிரதேச அரசு, வேலை இல்லா இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. தவிர, உள்பிரதேசங்களில் பணி புரிந்து வரும் இளைஞர்கள் வசதியான வாழ்வு நிலையை, ஒளிப்படமாகத் தயாரித்து, குடும்பங்களிலுள்ள முதியோருக்குக் காண்பிக்கிறது. வெளியூர்களில் பணி புரிந்து வருபவர்கள் அனைவரும் சீரான சாதனைகளைப் பெற்றுள்ளதைக் கண்டு, இடம் பெயர்தலை விரும்பாத அவர்களின் எண்ணம் மாறத் துவங்கியது. உய்கூர் இனத்தைச் சேர்ந்த முதியோர் Iminhasan mamut கூறியதாவது,

முன்பு, நாங்கள் எளிய வாழ்க்கை நடத்தினோம். பயிர் செய்வதைத் தவிர, செல்வங்களைத் தேடும் மேலதிக வழிமுறைகளும் இருக்கின்றன என்பதை, உள்பிரதேசத்திலுள்ள வளர்ந்த நகரங்களுக்குச் சென்ற பின் தான், நான் அறிந்து கொண்டேன் என்றார் அவர்.

சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியின் hetian பிரதேசத்தின் விவசாயியான Bur jahan ismayil, முன்னதாக வெளியூர் சென்று பணி புரிந்தவராவார். வெளியூர்களில் பணி புரிந்தது, அவரது வாழ்க்கையைப் பெரியளவில் மாற்றிவிட்டதாக அவர் கூறினார்.

..................ஒலி 3....................

நிலம், எமது வாழ்வின் அடிப்படையாகும். ஆனால், நிலத்தைத் தவிர, வேறு பல வழிமுறைகள் மூலம், சொந்த வாழ்க்கையை மென்மேலும் நன்றாக மாறச் செய்ய முடியும் என்றார் அவர்.

நேரத்தை வீணாக்க வேண்டாம். நேரத்தை முழுமையாக பயன்படுத்தி, அதிக அறிவைக் கற்றுக் கொண்டு, தன்னை ஒரு செயல்திறன் மிக்கோராக கற்றுத் தேற செய்ய வேண்டும். இது, சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சிறுப்பான்மைத் தேசிய இன இளைஞர்களின் இப்போதைய எண்ணமாகும்.

தென் சின்கியாங்கின் பல்வேறு இடங்களில், எல்லாவித செயல்திறன் பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்து, மாணவர்கள் உணர்வு பூர்வமாகக் கற்றுக் கொள்வதை காண முடிகிறது. இங்கு, அவர்கள், பூ வேலைப்பாடு, கையால் கம்பளிப் பின்னுதல், தச்சர் பணி, கலைப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியக்கலை முதலிய அக்கறை கொண்ட செயல்திறன்களைக் கற்றுக் கொள்கின்றனர். Kashi பிரதேசத்தின் தேசிய இன இசைக்கருவி தயாரிப்பில், ஊரிலுள்ள 520 பேர், ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தயாரிக்கும் இசைக்கருவிகள், சின்கியாங் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

1 2