• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-17 10:41:21    
சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சிறுபான்மைத் தேசிய இன இளைஞர்கள்

cri

தற்போது, தென் சின்கியாங்கின் kashi, hetian, kezilesu khalkhas தன்னாட்சிச் சோவின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில், வெளியூர் சென்று, வேலை செய்யும் சிறுபான்மைத் தேசிய இன இளைஞர்கள் மென்மேலும் அதிகரித்துள்ளனர். தமது பெற்றோர்களின் முகங்களில் நிறைந்த இன்பமான புன்னகையிலிருந்து, அவர்களது குழந்தைகள் வெளியூரில் பணி புரிவதால், குடும்பத்துக்கு விளைவிக்கும் மாற்றங்களைக் காணலாம். Khalkhas இன முதியோர் Tohtar yusup கூறியதாவது,

நான், சீனாவின் மிக மேற்குப் பகுதியிலுள்ள Pamir பீடபூமியில் வாழ்கின்றேன். இங்கு 90 விழுக்காட்டுக்கு மேலான பகுதி, மலைப் பிரதேசமாகும். பயிர் செய்ய மண் இல்லை. ஆடுமாடுகளை மேய்க்க புல்லுமில்லை. குழந்தைகள் வெளியூர் சென்று பணி புரிந்தால் தான், எமது வாழ்க்கையை வசதியாக மாற்றிக் கொள்ள முடியும் என்றார் அவர்.

இப்போது, சிறுபான்மைத் தேசிய இன இளைஞர்கள் வெளியூர் சென்று தொழில் புரிவதை, சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசு ஊக்குவிக்கிறது. அது மட்டுமல்ல, சின்கியாங்கின் பரந்த பிரதேசங்களில் பல பணி வாய்ப்புகளையும் வளர்த்துள்ளது. சின்கியாங் பிரதேசத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த தரைக் கம்பளப் பின்னல் நுட்பம், பாரம்பரிய கத்தித் தயாரிப்பு, பட்டுப் பின்னல், தேசிய இன உணவகங்கள் முதலிய திட்டப்பணிகள், சீனாவின் தொழில் சின்னங்களின் கண்காட்சியில், பரிசுகளைப் பெற்றுள்ளன. அவை, அப்பிரதேச இளைஞர்களுக்கு மேலதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

அடுத்த 3 முதல் 5 வரையான ஆண்டுகாலத்தில், சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், முழுவதும், செல்வ செழிப்பாக மாறும் செயல்திறன் பயிற்சி உள்ளிட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில், மென்மேலும் அதிகமான சின்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சிறுபான்மைத் தேசிய இன இளைஞர்கள், சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் பணி புரியும் நிலை ஏற்படும்.


1 2